இப்போது உள்ள தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்கள் அவர்கள் விரும்பிய கேரக்டர்களில் விரும்பிய கதைகளில் மட்டுமே நடிக்க சம்மதிப்பார்கள். அந்த படத்தில் தங்களது கேரக்டர் நடிக்க வேண்டிய காட்சிகள் திருப்தியாக இல்லை என்றால் இயக்குனரிடம் சொல்லி காட்சியை திருத்தவோ மாற்றவோ சொல்வார்கள். இல்லை என்றால் அந்த காட்சியே வேண்டாம் என படத்தில் இருந்து நீக்கச் சொல்வார்கள்.
இதே போல் பல ஆண்டுகளுக்கு முன்பு வரை படத்தில் துணை நடிகர்களாகவும் முக்கிய கேரக்டர்களில் நடிக்கும் நடிகர் நடிககைள் கூட தங்களுக்கு விருப்பமில்லாத காட்சியில் நடிக்க அவ்வளவு எளிதாக சம்மதிக்க மாட்டார்கள். முரண்பட்ட காட்சியாக இருக்கும் பட்சத்தில் அந்த காட்சியில் நடிக்க மறுப்பார்கள். இயக்குனர் ரொம்பவும் வற்புறுத்தினால் அந்த படத்தையே நிராகரிப்பதும் அவர்களது வழக்கமாக இருந்தது.
இதற்கு முக்கிய காரணம், அதுவரை அவர்கள் மற்ற படங்களில் நடித்து ரசிகர்களிடம் சேர்த்து வைத்துள்ள தங்களது நற்பெயரை புகழை கெடுத்துக்கொள்ள விரும்ப மாட்டார்கள். கண்ணியம் இல்லாத காட்சிகளில் நடித்து தங்களது இமேஜை கெடுத்துக்கொள்ள மாட்டார்கள்.
ஆனால் இப்போதைய சூழலில் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் போதும் என்ற நிலையில் நல்ல படங்களில் நடித்து நல்ல நடிகராக நடிகையாக பெயர் வாங்கிய பலரும், பணத்துக்காக சிலர் மீண்டும் வாய்ப்புக்காக இப்படி ஏதோ ஒரு காரணத்துக்காக எப்படிப்பட்ட கேரக்டராக இருந்தாலும் முன்னணி நடிகர் படம் என்றால் நடிக்க சம்மதித்து விடுகின்றனர்.
சமீபத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடித்த நடிகர் பிரசன்னா ஒரு நிகழ்ச்சியில் பேசியதாவது, இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் ஒரு வழக்கமான ஃபிலிம் மேக்கர் கிடையாது, ஒரு சீனை இப்படித்தான் எடுப்பாங்க என்கிற ஒரு பார்மேட் இருக்கும். ஆனா அது எதுவுமே ஆதிக்கிட்ட இருக்காது. என்ன எடுக்கப் போகிறார் என்று தெரியாது. எப்படி மாற்றப் போகிறார் என்றும் தெரியாது.
அந்த ஸ்பாட்ல திடீர்னு டயலாக் வரும். அப்படித்தான் கப்பலில் காட்சிகள் எடுக்கும் போது எனக்கு வேலை இல்லை என்று ரூமில் படுத்து தூங்கிட்டு இருந்தேன். திடீர்னு அசிஸ்டன்ட் டைரக்டர் வந்து, சார் வந்து காஸ்டியூம் போடுங்க. ஷாட் ரெடி என்று சொன்னார். எனக்கு ஒண்ணுமே புரியல, கடைசி வரைக்கும் நான் புரியாமயே நடிச்ச ஒரு படம் இதுதான் என்று நடிகர் பிரசன்னா கூறி இருக்கிறார். ரெபரென்ஸ் ரெபரன்ஸ் என படம் பார்த்த ரசிகர்கள் சொல்ற மாதிரியே நீங்களும் சொல்றீங்களே என கலாய்த்துள்ளனர்.





