- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த காட்சியில் நடிச்ச போது நானும் அவரும் நிஜமாவே அழுதோம் - ஏழை அப்பாக்களோட வலி...

அந்த காட்சியில் நடிச்ச போது நானும் அவரும் நிஜமாவே அழுதோம் – ஏழை அப்பாக்களோட வலி அது – நடிகர் இளவரசு சொன்ன தகவல்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் ஒளிப்பதிவாளராக இருந்தவர் இளரவசு. முதல் மரியாதை கிழக்கு சீமையிலே பாஞ்சாலங்குறிச்சி போன்ற பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணிசெய்திருக்கிறார். பிறகு ஒரு கட்டத்தில் மகாநதி சங்கர் உள்ளிட்ட சிலருக்கு பின்னணி குரல் பேசியவர் இளவரசு.

அதன்பிறகு சினிமாவில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்த அவர் பிறகு முழுநேர நடிகராக மாறிவிட்டார். பொற்காலம் ஆட்டோகிராப் தவமாய் தவமிருந்து இம்சை அரசன் 23ம் புலிகேசி முத்துக்கு முத்தாக மாயாண்டி குடும்பத்தார் அறை எண் 305ல் கடவுள் கலகலப்பு சதுரங்க வேட்டை பாண்டி என பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து அசத்தி வருகிறார்.

கடந்த சில ஆண்டுகளாக இளவரசு நடிக்காத படங்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு மிக முக்கியமான கேரக்டரில் எல்லாம் இளவரசு முக்கிய கேரக்டராக இருந்து வருகிறார். சில படங்களில் சில காட்சிகள் மட்டுமே அவர் வந்தாலும் அவரது கேரக்டர் வசன உச்சரிப்பு நடிப்பு என ரசிகர்களின் மனதில் நின்று விடுகிறார்.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் இளவரசு கூறியதாவது, தவமாய் தவமிருந்து படத்துல தீபாவளி அன்னைக்கு கையில காசு இருக்காது. அரசியல் கட்சித் தலைவர் போஸ்டர் ஒட்ட கூப்பிடுவார். ராஜ்கிரண் சார் ஓடிவந்து என்னை கூட்டிட்டு போவார். அந்த ஷாட் எடுக்க இயக்குனர் சேரன் ரொம்பவும் பாடுபட்டார்.

அப்போது தீபாவளி கிடையாது. உண்மையா மக்கள் நடமாடற தெருவுல ரோட்டில் எடுத்தோம். தீபாவளி மாதிரி காட்ட தெருமுழுக்கவும் வெடி போடணும். ஒன்ஸ்மோர் எடுத்தால் மறுபடியும் தெரு முழுக்கவும் வெடி போடணும். வாக்கி டாக்கி இல்லே. வெறும் பேச்சுல கடைசியில் இருக்கிறவனுக்கு சொல்ல முடியாது. பெரிய போராட்டம்.

நாங்க இரண்டு பேரும் போஸ்டர் ஒட்டும் போது அந்த பக்கம் ராஜ்கிரண் அழுதுகிட்டு இருந்தார். இந்த பக்கம் நான் அழுதுகிட்டு இருக்கேன். அந்த சீன் நாங்க ரெண்டு பேரும் எங்களை மறந்து நடிச்சோம். முத்தையா அழகரா நடித்த அந்த அனுபவம். அது படம் இல்லே. ஏழை அப்பாக்களோட வலி என்று இளவரசு அந்த காட்சியில் நடித்தது குறித்து உருக்கமாக கூறியிருக்கிறார்.

சற்று முன்