- Advertisement -
Homeபொழுதுபோக்குதேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் காலமானார் - கண்ணீர் விட்டு கதறிய ரசிகர்கள், தொண்டர்கள் -...

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் காலமானார் – கண்ணீர் விட்டு கதறிய ரசிகர்கள், தொண்டர்கள் – கவலையில் தத்தளிக்கும் தமிழ் சினிமாத்துறையினர்

- Advertisement -

தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் இன்று காலை காலமானார். அவர் மறைந்த தகவலை கேட்டு அவரது ரசிகர்களும் தொண்டர்களும் கதறி அழுதனர். தமிழ் சினிமா துறையை சார்ந்த நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் கவலையில் தவிப்பில் உள்ளனர்.

மதுரையை சேர்ந்த விஜயகாந்தின் நிஜப் பெயர் விஜயராஜ், சினிமாவில் நடிப்பதற்காக விஜயகாந்த் என பெயர் மாற்றம் செய்யபப்ட்டார். சென்னையில் தங்கி, கஷ்டப்பட்டு சினிமா வாய்ப்புகளுக்காக விஜயகாந்த், ஆரம்பத்தில் தனது நண்பர் இப்ராகிமுடன் அலைந்த நாட்கள் உண்டு. தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு பாதையை வகுத்துக்கொண்டு, வெற்றிக்கொடி நாட்டியவர்.

- Advertisement -

கடந்த சில வாரங்களுக்கு முன்புதான், உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று குணமாகி வந்தார். கடந்த வாரத்தில் தேமுதிக தலைமை அலுவலகத்தில் நடந்த கட்சியின் செயற்குழு, பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்டார். பேச முடியாத நிலையிலும், தொண்டர்கள், கட்சி நிர்வாகிகளை பார்த்து சைகை செய்துக்கொண்டு இருந்தார்.

இந்நிலையில் 2 தினங்களுக்கு முன் விஜயகாந்துக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மீண்டும் தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்ட நிலையில், அவரது பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டது. முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பதும் உறுதி செய்யபப்ட்ட நிலையில், வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் உடல் நிலை மிகவும் மோசமைடந்ததால், இன்று காலை விஜயகாந்த் உயிரிழந்தார்.

- Advertisement -

இதையடுத்து மருத்துவமனையில் இருந்து விஜயகாந்தின் உடல், சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு ஆம்புலன்ஸ் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து விஜயகாந்த் வீடு இருக்கும் பகுதியில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கூட்டமும் ரசிகர்கள் கூட்டமும் திரண்டுள்ளது. கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

விஜயகாந்த் மறைவு செய்தி, தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்களை, தொண்டர்களை பலத்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. பலரும் தங்களது பகுதியில் அவரது புகைப்படத்தை வைத்து இரங்கல் தெரிவித்து, அஞ்சலி செலுத்தி வருகின்றனர். திரையுலக பிரபலங்கள், நடிகர், நடிகைகள் விஜயகாந்த் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கேப்டன் மறைந்துவிட்டார் என்ற செய்தி கடும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

- Advertisement -

சற்று முன்