நடிகர் ரவி மோகன் நடித்த படம் பேராண்மை படத்தில் 5 கல்லூரி மாணவிகளில் ஒருவராக நடித்து அறிமுகமானவர் நடிகை சாய் தன்ஷிகா. தொடர்ந்து பரதேசி கபாலி சோலோ ஐந்தாம் வேதம் அரவான் உள்ளிட்ட பல படங்களில் சாய் தன்ஷிகா நடித்திருக்கிறார். இதில் கபாலி படத்தில் ரஜினிக்கு மகளாக அவர் நடித்திருந்தார்.
நடிகை சாய் தன்ஷிகாவுக்கும் நடிகர் விஷாலுக்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளது. அவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ள நிலையில் நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடப் பணிகள் முடிவடைந்த பிறகு இருவருக்கும் அதே சங்க மண்டபத்தில் திருமணம் நடைபெற உள்ளது. இதுகுறித்து ஏற்கனவே நடிகர் விஷால் அறிவித்துள்ளார்.
சமீபத்தில் நடிகை சாய் தன்ஷிகா நடித்த யோகிடா என்ற படம் திரைக்கு வந்துள்ளது. இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை சாய் தன்ஷிகா கேரளாவில் நடந்த ஷூட்டிங்கில் தனக்கு ஏற்பட்ட ஒரு கசப்பான அனுபவம் குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார். அது இப்போது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து நடிகை சாய் தன்ஷிகா கூறியதாவது, கேரளாவில் நடந்த ஒரு படப்பிடிப்பின் போது பிரேக் விட்டனர். அந்த நேரத்தில் நான் என் கேரவனுக்கு சென்றேன். என் உதவியாளரும் அப்போது என்கூட இருந்தார். அப்போது ஒருவர் வந்து புகைப்படம் எடுக்க வேண்டும் என்றார். அவர் போதையில் இருந்தார். நீங்கள் குடித்திருக்கிறீர்கள். அதனால் உங்களுடன் புகைப்படம் எடுக்க முடியாது என்று நான் மறுத்துவிட்டேன்.
ஆனால் அவர் போகாமல் என்னிடம் பிரச்சனை செய்தார். வேறு வழியின்றி அவரை அடித்து அங்கிருந்து நான் துரத்தி விட்டேன். நானும் பிறகு கேரவனுக்குள் சென்று விட்டேன். சிறிது நேரம் கழித்து கேரவனில் இருந்து நான் வெளியே வந்த போது அந்த போதை ஆசாமி 7 பேருடன் சேர்ந்துக்கொண்டு அங்கே வந்தார். அப்போது அங்கு பெரிய சண்டையே நடந்தது.
நான் கற்றுக் கொண்ட தற்காப்பு கலைகளை அந்த நேரத்தில் அந்த கும்பலிடம் பயன்படுத்தி அடித்து விரட்டினேன். அது எனக்கு ஒரு பாதுகாப்பாக இருந்தது. இறுதியில் டைரக்டரும் ஹீரோவும் வந்து என்னை பிடித்து தடுத்னர். அப்போதும் என் கோபம் முழுமையாக தனியவில்லை. என்னுடன் இருக்கும் ஒருவரை யாராவது தாக்கினால் நான் அமைதியாக பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்று சாய் தன்ஷிகா கூறினார்.





