- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னதாம்பா உங்க பிரச்னை? எண்டு கார்டு போட்ட விஷயத்துக்கு ஸ்டார்ட் ஆக்சன் சொல்ல வைத்த லோகேஷ்...

என்னதாம்பா உங்க பிரச்னை? எண்டு கார்டு போட்ட விஷயத்துக்கு ஸ்டார்ட் ஆக்சன் சொல்ல வைத்த லோகேஷ் கனகராஜ் – அட இதுவும் அந்த படம்தானா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய இதுவரை ஐந்தே ஐந்து படங்கள்தான். அதிலும் ஒரு படம் விஜய் நடித்த லியோ படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும் விமர்சன ரீதியாக தோல்வியடைந்தது. அதே போல் மாஸ்டர் படமும் சகல தரப்பினருக்கும் பிடித்த படமாக இருக்கவில்லை. ஆனால் மாநகரம், கைதி மற்றும் விக்ரம் படங்கள் வேற லெவலில் இருந்ததால், அந்த படங்களை தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடினர்.

இப்போது ரஜினிகாந்த் நடிக்கும் 171வது படத்தை இயக்கும் அரிய வாய்ப்பை பெற்றிருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இந்த படம் லியோ போல சொதப்பி விடாமல், விக்ரம் அல்லது கைதி படம் போல செம மாஸ் படமாக இருக்க வேண்டும் என, ரஜினி ரசிகர்கள் தொடர்ந்து லோகேஷ் கனகராஜிடம் வலியுறுத்தி வருகின்றனர். இதில் சூப்பர் ஸ்டாரை வேற லெவலில் காட்டுவேன் என அவரும் உறுதியளித்து இருக்கிறார்.

- Advertisement -

இயக்குனர் லோகேஷ் கனகராஜூக்கு தமிழ் சினிமாத்துறையில் நிறைய நண்பர்கள் இருக்கின்றனர். அதில் மிகவும் நெருங்கிய அவரது நண்பர் ரத்னக்குமார். இவர் மேயாத மான் படத்தின் டைரக்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கிய படங்களில் அவருடன் இணைந்து உதவி இயக்குனராக பணிபுரிந்திருக்கிறார்.

லியோ படம் குறித்த சில மோசமான விமர்சனங்களுக்கு, ரத்னக்குமாரின் தலையீடுதான் காரணம் என பின்னர் தெரிய வந்தது. அதனால் ரஜினி படத்தில் அவரது தலையீடு வேண்டாம் என லோகேஷ் அவரை ஒதுக்கி வைத்து விட்டார். அதுமட்டுமின்றி லியோ சக்சஸ் மீட்டில், தனது நண்பன் அடுத்து ரஜினி படத்தை இயக்குகிறார் என தெரிந்தும், கழுகு குறித்து தேவையின்றி ரத்னக்குமார் பேசியதும் பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. அதுவும் இந்த விலகலுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன், லோகேஷ் கனகராஜ் தயாரிப்பு மற்றும் கதையில், நடிகர் மாஸ்டர் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் ஒரு படத்தை ரத்னக்குமார் டைரக்ட் செய்ய ஒப்பந்தம் செய்யபப்பட்டது. இதில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கவும் முடிவானது. ஆனால் நயன்தாரா இந்த படத்தில் இருந்து விலகிவிட்டார். மாஸ்டர் ராகவா லாரன்ஸ்சும், டைரக்டரை மாற்றினால் இந்த படத்தில் நடிக்கிறேன் எனக் கூறிவிட்டார்.

அதனால் அந்த படமே முடங்கிப் போனது. மீண்டும் அந்த படமே வராது எனக் கூறப்பட்ட நிலையில், டைரக்டர் லோகேஷ் கனகராஜ், ரத்னக்குமாரை அழைத்துச் சென்று, ராகவா லாரன்ஸ்சை சந்தித்து பேசியிருக்கிறார். என் தலைவர், குருநாதர் சூப்பர் ஸ்டாரை அவமதித்தவர் என, ராகவா லாரன்ஸ் வருத்தப்பட்டு இருக்கிறார். அதன்பிறகு சமதானம் பேசி அந்த படத்தில் அவரை நடிக்க சம்மதிக்க வைத்துள்ளார். ஆனால் இந்த படமும் ஒரு வித்யாசமான பேய் படம்தான் என்கிற தகவலும் இப்போது வெளியாகி உள்ளது. லாரன்ஸ் காஞ்சனாவை மறந்தாலும், மத்தவங்க அதை மறக்கறதே இல்லை என்கின்றனர் ரசிகர்கள்.

- Advertisement -

சற்று முன்