- Advertisement -
Homeபொழுதுபோக்குபிரபல நடிகை கடத்தப்பட்ட விவகாரம்… கூலிப்படை வைத்து மனைவியை கடத்தியதே அவரது கணவர்தானா? - விசாரணையில்...

பிரபல நடிகை கடத்தப்பட்ட விவகாரம்… கூலிப்படை வைத்து மனைவியை கடத்தியதே அவரது கணவர்தானா? – விசாரணையில் வெளியான பகீர் தகவல்!

- Advertisement -

கன்னடத்தில் டிவி சீரியல்களில் பிரபல நடிகையாக இருப்பவர் சைத்ரா. இவர் சில கன்னட திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். சைத்ராவின் கணவர் ஹர்ஷவர்தன். இவர் ஹர்ஷன் எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தின் உரிமையாளராக உள்ளார்.அவர் திரைப்படம் டிவி சீரியல் தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார்.

கடந்த 2023ம் ஆண்டில் தயாரிப்பாளர் ஹர்ஷவர்தனுக்கும் நடிகை சைத்ராவுக்கும் திருமணம் நடந்தது. அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக நடிகை சைத்ரா தனது கணவரை பிரிந்து பெங்களூருவின் தன் குழந்தையுடன் வாழ்ந்து வருகிறார். கடந்த பல மாதங்களாக இருவரும் தொடர்பின்றி இருந்து வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் நடிகை சைத்ராவை அவரது கணவர் ஹர்ஷவர்தன் காரில் கடத்திச் சென்றுள்ளார். கடந்த 7ம் தேதி மைசூருக்கு படப்பிடிப்புக்கு செல்வதாக வீட்டில் சொல்லிவிட்டு சைத்ரா சென்ற நிலையில், அவரை ஹர்ஷவர்தன் கூலிப்படை வைத்து காரில் கடத்தியதாக கூறப்படுகிறது.

நடிகை சைத்ரா கடத்தப்பட்ட நிலையில், பல மணி நேரத்துக்கு பிறகு சைத்ரா எப்படியோ அவரது நண்பருக்கு போன் செய்து தனது கணவரின் ஆட்களால் அவர் காரில் கடத்தப்பட்ட விவகாரத்தை தெரிவித்துள்ளார்.
அந்த நண்பர், சைத்ராவின் குடும்பத்தினருக்கு இந்த தகவலை உடனே சொல்லி இருக்கிறார்.

- Advertisement -

இதையடுத்து சைத்ராவின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். இந்த நிலையில் சைத்ராவின் அம்மாவுக்கு போன் செய்த ஹர்ஷவர்தன், தங்களது ஒரு வயது பெண் குழந்தையை நான் சொல்லும் இடத்தில் கொண்டு வந்து என்னிடம் கொடுத்தால் தான், சைத்ராவை விடுவிப்பேன் என்று அவரை மிரட்டியதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த ஏழெட்டு மாதங்களாக ஹர்ஷன்வர்தனை சைத்ரா பிரிந்து வாழும் நிலையில் குழந்தையை அவர் தனது பராமரிப்பில் வைத்துள்ளார். எனவே தனது குழந்தைக்காக மனைவி சைத்ராவை கௌசிக் என்ற தனது கூட்டாளியுடன் இணைந்து காரில் ஹர்ஷன்வர்தன் கடத்தியிருப்பது போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் உறுதியான நிலையில் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

- Advertisement -

சற்று முன்