நடிகர் விஜய், தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படுபவர். துவக்கத்தில் இளையதளபதி என அழைக்கப்பட்ட அவர் இப்போது தளபதி என அழைக்கப்படுகிறார். பீஸ்ட், வாரிசு படங்களை தொடர்ந்து தற்போது விஜய் நடித்த லியோ படம், வரும் 19ம் தேதி ரிலீஸ் ஆகிறது. ரசிகர்கள் வெகு ஆவலாக லியோ படத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
லியோ படத்தின் இசை விழா ரத்து என்ற நிலையில், ரசிகர் சிறப்பு காட்சிக்கும் துவக்கத்தில் அரசு அனுமதி மறுத்ததால், ரசிகர்கள் பலத்த ஏமாற்றத்தில் இருந்தனர். ஆனால், இப்போது 19ம் தேதி இரண்டு சிறப்பு காட்சிகள், 20ம் தேதி முதல் 24ம் தேதி வரை 5 நாட்களுக்கு ஒரு சிறப்பு ரசிகர் காட்சியும் நடத்திக்கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளதால், ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
இப்போது நடிகர் விஜய், இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் 68 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அப்பா – மகன் என இரண்டு கேரக்டர்களில் விஜய் நடிக்கிறார். சிநேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, அர்ஜூன், பிரசாந்த், பிரபுதேவா ஆகியோர் நடித்து வருகின்றனர். குறிப்பாக நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் மோகன், இந்த படத்தில் ரீ என்ட்ரி தருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், லியோ படப்பிடிப்பின் போது நடந்த சம்பவம் ஒன்று, இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. லியோ படப்பிடிப்பு, காஷ்மீர் பகுதியில் பல நாட்கள் நடந்தது. அப்போது அங்கு வந்த இந்தி மற்றும் காஷ்மீரி ரசிகர்கள் லியோ ஷூட்டிங் காட்சிகளை அருகில் இருந்து பார்த்து ரசித்துள்ளனர். அப்போது அங்கிருந்த விஜயை, அங்கிருந்த ரசிகர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை.
ஆனால், அங்கிருந்த ரசிகர்கள் பலரும், படத்தின் டைரக்டர் எங்கே என விசாரித்து, லோகேஷ் கனகராஜ் அங்கு இருப்பதை அறிந்தவுடன் அவரை ஆர்வமாக பார்க்கச் சென்றுள்ளனர். அவரது கையை பிடித்து குலுக்கிய ரசிகர்கள், அவருடன் பலத்த சந்தோஷத்துடன் செல்பி எடுத்துக் கொண்டுள்ளனர். விஜய் உள்ளிட்ட மற்ற நடிகர்கள், படக்குழுவினர் இதைப் பார்த்து ஆச்சரியப்பட்டுள்ளனர்.
அதன்பிறகு விசாரித்த போது, தமிழில் கார்த்தி நடித்த கைதி படம், இந்தியில் போலோ என்ற பெயரில் எடுக்கப்பட்டுள்ளது. கார்த்தி கேரக்டரில் பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் நடித்த போலோ படம், அங்கு மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளது. அப்போது படத்தின் இயக்குநர் யார் என, கூகுள் சர்ச்சில் தேடித் தெரிந்துக்கொண்ட இந்தி பட ரசிகர்கள், காஷ்மீரில் நடந்த லியோ படப்பிடிப்பு தளத்துக்கு வந்து, டைரக்டர் லோகேஷ் கனகராஜை நேரில் பார்த்து வாழ்த்துகளை, பாராட்டுகளை தெரிவித்துள்ளனர், என்பது தெரிய வந்துள்ளது.





