- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர்கள் சிவகார்த்திகேயன் ரவிமோகன் வாங்கிய சம்பளம் இதுதான்… பராசக்தி படத்தின் மொத்த பட்ஜெட் - வெளியான...

நடிகர்கள் சிவகார்த்திகேயன் ரவிமோகன் வாங்கிய சம்பளம் இதுதான்… பராசக்தி படத்தின் மொத்த பட்ஜெட் – வெளியான முக்கிய தகவல்!

- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 10ம் தேதி வெளியாகி திரையரங்குகளின் ஓடிக்கொண்டிருக்கும் படம் பராசக்தி. இந்த படத்தை இறுதிச்சுற்று சூரரை போற்று படங்களை இயக்கிய இயக்குனர் சுதா கொங்கரா டைரக்ட் செய்திருக்கிறார். நடிகர் ரவிமோகன் வில்லனாகவும் ஸ்ரீலீலா நாயகியாகவும் அதர்வா முக்கிய கேரக்டரிலும் நடித்திருக்கிறார்.

மிகவும் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான பராசக்தி படம் கடந்த 1960 65 காலத்தில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்ட பீரியட் படமாகும். சிவாஜி கணேசன் சினிமாவில் அறிமுகமான முதல் படம் பராசக்தி.

- Advertisement -

கலைஞர் கருணாநிதி வசனத்தில் மக்கள் கொண்டாடிய அந்த படத்தின் டைட்டிலில் இந்த படம் வெளியான நிலையில் எதிர்பார்த்த வரவேற்பு ரசிகர்களிடம் இல்லை. குறிப்பாக இந்தி திணிப்பு எதிர்ப்பு களத்தில் உருவான படத்தில் காதல் காட்சிகளும் டூயட் பாடல்களும் என படம் வேறு கதைக்களத்தில் பயணிக்கிறது.

குறிப்பாக உண்மை சம்பவங்களை கொண்ட போராட்ட களத்தில் உருவான படம் என்று சொல்லிவிட்டு ஹீரோ வில்லன் மோதலை படமாக்கி தந்திருக்கிறார். வில்லன் கேரக்டரில் நடித்த ரவிமோகன் நடிப்பை தவிர படத்தில் எந்த கேரக்டரும் ரசிகர்களுக்கு மனதில் நிற்கவில்லை என்கிற கடும் விமர்சனமும் பராசக்தி படத்துக்கு எழுந்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் முதல் நாளில் 24.5 கோடி ரூபாய் மொத்த வசூலை எட்டிய பராசக்தி படம் 2வது நாளில் ரூ. 45 கோடி வரை வசூலித்திருப்பதாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது. பெரும்பாலான தியேட்டர்களில் 2ம் நாளான நேற்று 10 பேர் 20 பேர் என்றுதான் ரசிகர்கள் வந்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலானது.

இதற்கிடையே பராசக்தி படம் குறித்த சில முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த படத்தின் மொத்த பட்ஜெட் ரூ. 141 கோடி என்றும் இதில் சிவகார்த்திகேயன் சம்பளம் ரூ. 30 கோடி நடிகர் ரவிமோகன் சம்பளம் ரூ. 16 கோடி நடிகர் அதர்வா சம்பளம் ரூ. 2 கோடி இயக்குனர் சுதா கொங்கரா சம்பளம் ரூ. 15 கோடி என்றும் லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் போகிற போக்கை பார்த்தால் பராசக்தி ரூ. 100 கோடியை எட்டுவதே திண்டாட்டமாகி விடும் என்று ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்