பீஸ்ட் திரைப்படத்தின் தோல்வியால் எழுந்த கேலி, கிண்டலுக்கும், வசை பாடுகளுக்கும் ஜெயிலர் திரைப்படம் மூலம் பதிலடி கொடுத்திருக்கிறார் இயக்குனர் நெல்சன். படத்தின் விமர்சனம், திரைக்கதை விறுவிறுப்பு இதையெல்லாம் தாண்டி ரஜினியின் மாஸ் மொமெண்ட்களை ரசிப்பதற்காகவே திரையரங்குகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக அலைமோதுகின்றனர்.

முதல் பாதையில் ரஜினிக்கே உண்டான மாஸ் காட்சிகளை ஆங்காங்கே வைத்த இயக்குனர் நெல்சன், இடைவேளையில் ரசிகர்களின் விசில் சத்தம் விண்ணை பிளக்கும் வகையில் காட்சி வைத்திருந்தார். இரண்டாம் பாதியில் கதை எங்கெல்லாமோ டிராவல் ஆகினாலும், சோர்வை ஏற்படுத்தாமல் இருக்க அங்கங்கே திருப்புமுனை காட்சிகளையும் பிரமாதமாக வைத்திருந்தார் நெல்சன்.
அதுவும் கிளைமாக்ஸ் காட்சியில், சிவராஜ்குமார், மோகன்லாலை பயன்படுத்திய விதம் வேற லெவலில் இருந்ததால் ஜெயிலர் படத்திற்கு ரிப்பீட்டட் ஆடியன்ஸ் வந்த வண்ணம் உள்ளனர். ஏற்கனவே முன்பதிவில் வசூல் சாதனை படைத்த இந்த திரைப்படம், தற்போது திரையரங்குகளில் கல்லா கட்டி வருகிறது.

கடந்த 10 ஆம் தேதி படம் வெளியான நிலையில், வியாழன், வெள்ளி ஆகிய இரு நாட்களில் மட்டும் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அது மட்டுமல்லாமல், வெளிநாடுகளில் கமலின் விக்ரம் பட வசூலையும், ஜெயிலர் முந்தி இருப்பதாக கூறப்படுகிறது. புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் படம் வசூல் சாதனை படைத்து வருகிறது.
இதில் சிரஞ்சீவியின் போலா சங்கர் எதிர்பார்த்த வரவேற்பை பெறாததால், ஆந்திராவில் கூடுதலாக 100 திரையரங்குகளில் ஜெயிலர் திரையிடப்பட்டுள்ளது. ரஜினியை வைத்து மிகப்பெரிய ஹிட்டை கொடுத்த நெல்சனை பலரும் பாராட்டி வரும் நிலையில், அவரை நட்சத்திர ஹோட்டலுக்கு அழைத்து சூட்ரூமில் பிரம்மாண்ட பார்ட்டி கொடுத்திருக்கிறாராம் நடிகர் ராகவா லாரன்ஸ். இந்த கொண்டாட்டத்தில் சில சினிமா பிரபலங்களும் பங்கேற்றதாக கூறப்படுகிறது.
சம்பந்தமே இல்லாமல் எதற்கு ராகவா லாரன்ஸ் நெல்சரை அழைத்து ட்ரீட் கொடுத்தார் என்று பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில், அது தொடர்பாக சினிமா விமர்சகர்கள் சிலர் பதில் கூறியுள்ளனர். அதாவது, சந்திரமுகி படத்தை எடுத்த பி வாசு உடன் இணைந்து தற்போது ராகவா லாரன்ஸ், சந்திரமுகி பார்ட் 2வில் நடித்திருக்கிறார். இதேபோல் பேட்ட படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜுடன், ஜிகர்தண்டா டபுள்ஸ் படத்திலும் பணி புரிந்து இருக்கிறார். ஒருவேளை அந்த கணக்கில், நெல்சனை அழைத்து கதை கேட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தன்னை ரஜினி ரசிகராக காட்டிக் கொள்ளும் ராகவா லாரன்ஸ், ரஜினி பட இயக்குனர்களை கைவசம் வைத்துக்கொள்ள முயற்சிப்பதாகவும் சிலர் இணையத்தில் கூறி வருகின்றனர்.





