- Advertisement -
Homeபொழுதுபோக்குசினிமாவில் இப்படி எல்லாம் கூட சென்டிமென்ட் பார்ப்பாங்களா? - சிவகார்த்திகேயன் செஞ்சிருக்கற வேலையை பாருங்க!

சினிமாவில் இப்படி எல்லாம் கூட சென்டிமென்ட் பார்ப்பாங்களா? – சிவகார்த்திகேயன் செஞ்சிருக்கற வேலையை பாருங்க!

- Advertisement -

தமிழ் சினிமாவில் சில படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறுகின்றன. பல படங்கள் மிக மோசமாக தோல்வியடைகின்றன. சில நேரங்களில் சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படங்கள், பிரமாண்ட படங்களை விடவும் மக்களிடம் வரவேற்பை பெற்று, வசூலை குவித்து விடுகின்றன.

அந்த வகையில் குட்நைட், காந்தாரா, காக்கா முட்டை, கிடா, பார்க்கிங் போன்ற பல படங்களை சொல்லலாம். இந்த படங்களில் இருப்பது நேர்த்தியான கதையும், அதை திறம்பட திரைக்கதையாக வடிமைத்த சொன்ன விதமும், அந்த கேரக்டர்கள் வெளிப்படுத்திய யதார்த்தமான நடிப்பும்தான்.

- Advertisement -

இந்த ஆண்டின் பிரமாண்ட படைப்புகளாக எதிர்பார்க்கப்பட்ட முன்னணி ஹீரோக்கள் நடித்த பல படங்கள், படுமோசமாக பிளாப் ஆகின. அந்த வகையில் ஜெயம் ரவி நடித்த இறைவன், கார்த்தி நடித்த ஜப்பான், ராகவா லாரன்ஸ் நடித்த சந்திரமுகி 2, சமந்தா நடித்த சாகுந்தலம், விஜய் சேதுபதி நடித்த மெரி கிறிஸ்துமஸ் இப்படி பல படங்களை சொல்ல முடியும்.

பெரிய நடிகர்கள் நடித்தும், பெரிய அளவில் பல நூறு கோடிகளை செலவு செய்தும். இந்த படங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பு பெறாமல் போக ஒரே காரணம், படத்தின் கதை மற்றும் திரைக்கதை தான். அதுமட்டும் நன்றாக இருந்திருந்தால், படங்கள் பேசப்பட்டு இருக்கும். ஆனால் சொதப்பலான கதை என்றால் யார் நடித்திருந்தாலும், எவ்வளவு செலவு செய்திருந்தாலும் படம் குப்பை என்றுதான் விமர்சனம் வரும்.

- Advertisement -

இந்த நிலைதான் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த அயலான் படத்துக்கும் ஏற்பட்டது. சிறப்பாக மேக்கிங், பூமிக்கு வரும் ஏலியன் என கதையின் கரு நன்றாக இருந்தும் படம் ஓடவில்லை. ஏனெனில், கதையம்சம் இருந்தும், திரைக்கதையில் மக்களுக்கு மனசு ஒட்டவில்லை. அதை புரிந்துக்கொண்டு செயல்பட்டு இருந்தால், படம் மாஸ் ஹிட் ஆகியிருக்கும்.

 Actor Sivakarthikeyan

இந்நிலையில், நடிகர் கமலின் தயாரிப்பு நிறுவனம் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் எஸ்கே 21 படத்துக்காக, கருப்பு நிற பனியன் போட்டுக்கொண்டு உடற்பயிற்சி செய்யும் சிவகார்த்திகேயன் செய்யும் ஸ்டில்ஸ் வெளியாகி உள்ளது. அதாவது ரஜினி, கமல், தனுஷ், விஜய், அஜீத், விக்ரம், சூர்யா போன்றவர்கள், கருப்பு பனியன் போட்டுக்கொண்டு உடற்பயிற்சி செய்த காட்சிகள் இடம்பெற்ற படங்கள், மிகப்பெரிய வெற்றி படங்களாக இருந்ததாம். அதனால், எஸ்கே 21 படத்துக்காக, கருப்பு பனியன் போட்டு சிவகார்த்திகேயன் ஜிம்மில் எக்சர்சைஸ் செய்த காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. கதை ஜெயிக்குமா, கருப்பு பனியன் ஜெயிக்குமா என்பது படம் ரிலீஸானால் விரைவில் தெரிந்து விடும்.

- Advertisement -

சற்று முன்