- Advertisement -
Homeபொழுதுபோக்குகடைசி வரைக்கும் சொன்ன வாக்கை காப்பாற்றாத மாஸ்டர் ராகவா லாரன்ஸ், நடிகர் சண்முக பாண்டியன் எடுத்த...

கடைசி வரைக்கும் சொன்ன வாக்கை காப்பாற்றாத மாஸ்டர் ராகவா லாரன்ஸ், நடிகர் சண்முக பாண்டியன் எடுத்த அதிரடி முடிவு – ஆனா தம்பியை அவர் கைவிடலையே…?

- Advertisement -

நடிகர் விஜயகாந்துக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் விஜய பிரபாகரன், தேமுதிக கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில், விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். தொடர்ந்து தேமுதிக கட்சி பணிகளில் ஈடுபட்டு வருகிறார். விஜயகாந்த் மறைவுக்கு பிறகு கட்சியின் பொதுச்செயலாளராக அவரது மனைவி பிரேமலதா இருந்து வருகிறார்.

விஜயகாந்தின் 2வது மகன் சண்முக பாண்டியன், திரைப்பட நடிகராக இருந்து வருகிறார். ஏற்கனவே சகாப்தம், மதுரை வீரன் ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார். இப்போது படைத்தலைவன் என்ற படத்தில் சண்முகபாண்டியன் நாயகனாக நடித்துள்ளார். அதன் படப்பிடிப்பு சில மாதங்களாக நடந்து வந்தது.

- Advertisement -

இந்நிலையில், நடிகர் விஜயகாந்த் மறைவின் போது துக்கம் விசாரிக்க கேப்டன் வீட்டுக்குச் சென்ற மாஸ்டர் ராகவா லாரன்ஸ், விஜயகாந்த் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன், அவரது மகன்களுக்கு ஏதாவது உதவி செய்ய விரும்புகிறேன். அதனால் நடிகர் சண்முகபாண்டியன் நடிக்கும் படத்தில் அவர் விரும்பினால், கெஸ்ட் ரோலில் நடித்து தருகிறேன். எப்போது அழைத்தாலும் கால்ஷீட் தருகிறேன் என, வீடியோ ஒன்றை அவரே வெளியிட்டு இருந்தார்.

அதன்பிறகு படைத்தலைவன் படத்தில் ஒரு சண்டைக்காட்சியில் மாஸ்டர் ராகவா லாரன்ஸ்சிடம், சண்முக பாண்டியன் தரப்பில் இருந்து பேசப்பட்டது. அவரும் உடனே ஒத்துக்கொண்டார். ஒரு சண்டைக் காட்சியில் சண்முக பாண்டியனும், மாஸ்டர் ராகவா லாரன்ஸ்சும் இணைந்து சண்டையிட்டு எதிரிகளை அடித்து விரட்டுவதுபோல் அந்த காட்சி திட்டமிடப்பட்டுள்ளது.

- Advertisement -

ஆனால், படைத்தலைவன் படத்தில் கேமியோ ரோலில் நடிக்க மாஸ்டர் ராகவா லாரன்ஸ் ஒப்புக்கொண்ட பிறகு, 6 மாதங்களாகியும் அதற்கான கால்ஷீட் தரவே இல்லை. பலமுறை படக்குழுவினர் தொடர்பு கொண்டும் அவர் சொன்ன வாக்கை நிறைவேற்றவே இல்லை. கடைசியாக, அவர் இல்லாமலேயே சண்முகபாண்டியனே அந்த சண்டைக் காட்சியில் நடித்து படத்தையும் முடித்து விட்டனர். வரும் ஆகஸ்ட் 23ம் தேதி படைத்தலைவன் படம் ரிலீஸ் ஆகிறது.

காஞ்சனா 4 படம் சார்ந்த பணிகளில் ராகவா லாரன்ஸ் பிஸியாக இருந்ததால், சண்முகபாண்டியனுடன் நடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. என்றாலும், அவரே வலிய வந்து வாக்குறுதி தந்துவிட்டு இப்படி ஏமாற்றலாமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதற்கிடையே அவரது தம்பி எல்வின் நடிக்கும் புல்லட் என்ற படத்தில் கேமியோ ரோலில் 12 நாட்கள் நடித்துக்கொடுத்திருக்கிறார் ராகவா லாரன்ஸ் என்ற லேட்டஸ்ட் தகவலும் கிடைத்துள்ளது.

- Advertisement -

சற்று முன்