நடிகர் ரஜினிகாந்த், இப்போது தசெ ஞானவேல் இயக்கத்தில், வேட்டையன் என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். சமீபத்தில் அபுதாபி உள்ளிட்ட அரபு நாடுகளுக்கு டூர் சென்று வந்த நடிகர் ரஜினிகாந்த் இப்போது இமயமலையில் இருக்கிறார். ஒரு வாரத்தில் அவர் மீண்டும் சென்னை திரும்ப உள்ளார்.
அதன்பிறகு சில தினங்களில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கூலி படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்துக்கொள்ளும் ரஜினிகாந்த், இந்த படத்தை முடித்த பிறகு, அடுத்து தொடர்ந்து சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜெயிலர் 2 படத்தில் நடிக்கிறார்.
நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்த படத்தின் ப்ரீ புரொடக்சன் பணிகள் இப்போதே துவங்கி விட்டது. இந்த படத்தின் ஸ்கிரிப்ட், நடிக்க வேண்டிய நடிகர்கள் குறித்தும், நெல்சன் தேர்வு செய்து வருகிறார். இந்த படத்தில் முக்கிய வேடத்தில் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா நடிப்பதாக நேற்று தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
வேட்டையன், கூலி, ஜெயிலர் 2 என 3 படங்களை இப்போது கைவசம் வைத்துள்ள நடிகர் ரஜினிகாந்த், ஏற்கனவே இயக்குனர் மாரி செல்வராஜிடம் ஒரு கதை கேட்டு, மிகவும் பிடித்துப் போனதாக கூறியிருக்கிறார். அதனால் அந்த படத்திலும் அவர் நடிக்க வாய்ப்புள்ளதாக ஏற்கனவே தகவல் உள்ளது.
இப்போது இந்த படங்களை தவிர சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மற்றும் ஒரு படம், வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிப்பில் ஒரு படம், சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் தயாரிப்பில் ஒரு படம் என, ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் ஒரு படம் என மேலும் 4 நிறுவனங்களின் தயாரிப்பில், 4 படங்களில் நடிக்க நடிகர் ரஜினிகாந்திடம் பேச்சு வார்த்தை நடந்துள்ளது.
இதில் 3 தயாரிப்பு நிறுவனங்களிடம் சம்மதம் தெரிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், அந்த நிறுவனங்கள் தயாரிக்கும் 3 படங்களிலும் நடிக்க ஓகே சொல்லிவிட்டார். இப்போது நடித்து முடித்துள்ள வேட்டையன் படம், நடிக்க உள்ள கூலி, ஜெயிலர் 2 படங்கள், அத்துடன் மேலும் 3 படங்கள் என ரஜினிகாந்த் கமிட் ஆகியிருப்பதால், அவரது ரசிகர்கள் ஏகப்பட்ட உற்சாகத்தில் இருக்கின்றனர். தலைவருக்கு 73 இல்ல, 23 தான் வயசு என்றும் கூறி வருகின்றனர்.





