- Advertisement -
Homeபொழுதுபோக்குஆர்த்தி - கணேஷ் காமெடி நட்சத்திர தம்பதிக்கு ரஜினிகாந்த் சொன்ன அட்வைஸ், இன்னமும் தலைவர் இப்படி...

ஆர்த்தி – கணேஷ் காமெடி நட்சத்திர தம்பதிக்கு ரஜினிகாந்த் சொன்ன அட்வைஸ், இன்னமும் தலைவர் இப்படி இருக்காரே என ஆச்சரியப்படும் ரசிகர்கள்!

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் இப்போது 74 வயதிலும் கதாநாயகனாக நடித்துக்கொண்டு இருக்கிறார். கடந்தாண்டில் அவர் நடித்த வேட்டையன் படம் வெளியாகி ஓரளவு வரவேற்பை பெற்றது. படத்தை தயாரித்த லைகா புரடக்சன்ஸ் நிறுவனத்துக்கு வசூலும் ஓரளவுக்கு திருப்தியாகவே இருந்தது. இந்த படத்தில் நீண்ட ஆண்டுகளுக்கு பின் இந்தி நடிகர் அமிதாப் பச்சன் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து நடிகர் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்தார். இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து போஸ்ட் புரடக்சன் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. அடுத்து வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி கூலி படம் வெளியாக உள்ளது. கூலி படத்துக்கு பின் நடிகர் ரஜினிகாந்த் இப்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார்.

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்தை பொருத்த வரை அன்று முதல் இன்று வரை ரசிகர்களை வெகுவாக கவர்வது அவரது ஸ்டைல்தான். அதை விட அவரிடம் இருக்கும் முக்கியமான ஒரு விஷயம் எளிமை. 45 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் எப்போதுமே எளிமையான மனிதராக தான் எந்த இடத்திலும் நடந்துக் கொள்வார். பந்தா அலட்டல் என்பதை அவரிடம் சிறிதும் காண முடியாது.

தமிழ் சினிமாவில் காமெடி நடிப்பில் ரசிகர்களை கவர்ந்தவர்கள் நடிகர் கணேஷ் மற்றும் ஆர்த்தி. குழந்தை நட்சத்திரங்களாக பல படங்களில் ஆர்த்தி மற்றும் கணேஷ் நடித்திருக்கின்றனர். குறிப்பாக ரஜினி கமல் விஜயகாந்த் சத்யராஜ் பிரபு கார்த்திக் அர்ஜூன் நடித்த பல படங்களில் ஆர்த்தி, கணேஷ் குழந்தை நட்சத்திரங்களாக நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர்கள்.

- Advertisement -

இந்நிலையில் சமீபத்தில் நடிகர் கணேஷ், நடிகை ஆர்த்தி தம்பதி நடிகர் ரஜினிகாந்தை அவர்களது வீட்டில் சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். அந்த பதிவில் ஆர்த்தி, கணேஷ் கூறியிருப்பதாவது, ஒவ்வொரு வருஷமும் பிறந்தநாளுக்கு நாங்க ரெண்டு பேருமே ரஜினி சார் சென்னையில் இருந்தால் நேரில் போய் வாழ்த்து வாங்கிடுவோம். வெளியூர்ல அவர் இருந்தா போன்ல பேசி வாழ்த்து வாங்குவோம்.

இந்த வருஷம் சென்னையில் இருந்தார். அதனால மே 10ம் தேதி கணேஷ் பிறந்தநாள் அன்று வரலாமா என்று கேட்டு அவரை நேரில் சந்தித்தோம். நாங்க நடிச்சிட்டு இருக்கிற படங்கள் பற்றி கேட்டார். எங்களுக்கு நிறைய அட்வைஸ் தந்தார். குறிப்பாக சினிமாவை தாண்டி வருமானத்துக்கு ஏதாவது வழி பண்ணி வைக்கணும்னு ரொம்ப அக்கறையோடு சொன்னார். சொந்தக்காரங்க கூட இந்த மாதிரி அக்கறை எல்லாம் படுவாங்களான்னு தெரியாது. ஆனால் ரஜினி சார் அப்படி எங்கள் மீது அக்கறை கொண்டிருக்கிறார் என்று நட்சத்திர தம்பதி ஆர்த்தி கணேஷ் அந்த பதிவில் நெகிழ்ச்சியாக கூறியிருக்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்