நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர நடிகராக இருக்கிறார். இப்போது அவர் தனது சினிமா பயணத்தில் 50 ஆண்டு விழா பொன்விழா ஆண்டை கொண்டாடி வருகிறார். அவர் தமிழ் சினிமாவில் நடிக்க வந்த இந்த ஆண்டில் 50 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார். வேட்டையன் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடித்து முடித்து விட்டார்.
அதைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் இப்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் டைரக்ட் செய்கிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படம் ரஜினி முதன் முறையாக நடிக்கும் அவரது 2வது பாகம் படம் என்பது குறிப்பிடத்தக்கது. மோகன்லால் சிவராஜ்குமார் பாலகிருஷ்ணா உள்ளிட்டோர் இந்த படத்தில் நடிக்கின்றனர்.
தனது ரசிகர்களுக்காக. தமிழக மக்களுக்காக அவ்வப்போது நடிகர் ரஜினிகாந்த் வீடியோ வெளியிடுவது வழக்கம். இப்போது கடலோரத்தில் வாழும் மக்களுக்கு தனது ரசிகர்களுக்கு முக்கிய வேண்டுகோள் ஒன்றை விடுத்து ஒரு வீடியோவில் அவர் பேசியிருக்கிறார். அந்த வீடியோவில் கையெடுத்து கும்பிட்டபடி ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில் கூறியிருப்பதாவது, அனைவருக்கும் வணக்கம். நம்ம நாடு மற்றும் மக்களின் நற்பெயர் அதனை கெடுக்கும் பயங்கரவாதிகள் கடல் வழியாக நாட்டிற்குள் புகுந்து கோர சம்பவங்கள் செய்வார்கள்.
அதற்கு உதாரணம் மும்பையில் கடந்த 2008ம் ஆண்டில் நவம்பர் மாதம் 26ம் தேதி நடந்த 26/11 கோர சம்பவம். கிட்டத்தட்ட 175 பேரின் உயிரை வாங்கிவிட்டது. இந்த கடலோரப் பகுதியில் வாழும் மக்கள் விழிப்புணர்வோடு இருந்து சந்தேகத்திற்குரிய நபர்கள் யாராவது நடமாடினால் அருகில் இருக்கும் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
இந்த ஒரு விழிப்புணர்வை கடலோர மக்களிடம் ஏற்படுத்த சிஐஎஸ்எப் வீரர்கள் 100 பேர் கிட்டத்தட்ட 7000 கிலோமீட்டர் மேற்கு வங்கத்திலிருந்து கன்னியாகுமரி வரை சைக்கிளில் பயணம் செய்வார்கள். அவர்கள் உங்கள் ஏரியாவுக்கு வரும்போது அவர்களை வரவேற்று உபசரியுங்கள். முடிந்தால் அவர்களுடன் கொஞ்ச தூரம் போய் அவர்களை உற்சாகப்படுத்துங்கள். நன்றி வாழ்க தமிழ் மக்கள் வளர்க தமிழ் மக்கள் ஜெய் ஹிந்த் என்று வீடியோவில் ரஜினிகாந்த் பேசியிருக்கிறார் இது தற்போது வைரலாகி வருகிறது,





