- Advertisement -
Homeபொழுதுபோக்குநானும் அம்மா ஆன பிறகுதான் செய்தது பெரிய தவறு என்பதை உணர்ந்தேன், எல்லாம் என் தலைவிதி...

நானும் அம்மா ஆன பிறகுதான் செய்தது பெரிய தவறு என்பதை உணர்ந்தேன், எல்லாம் என் தலைவிதி – நடிகை தேவயானி வருத்தம்!

- Advertisement -

நடிகர் கார்த்திக் ரேவதி ரகுவரன் உள்ளிட்டோர் நடித்த தொட்டாச்சிணுங்கி என்ற படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தேவயானி. ஆனால் இயக்குனர் அகத்தியன் இயக்கத்தில் நடிகர் அஜீத்குமாருடன் அவர் நடித்த காதல் கோட்டை படம்தான் மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்தது.

தொடர்ந்து சூரியவம்சம் தேடினேன் வந்தது பிரண்ட்ஸ் நீ வருவாய் என நிலவே முகம் காட்டு தெனாலி நினைத்தேன் வந்தாய் என பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார். ஒரு கட்டத்தில் இயக்குனர் ராஜகுமாரனை தேவயானி காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இந்த திருமணத்துக்கு தேவயானியின் பெற்றோர் சம்மதிக்கவில்லை.

இயக்குனர் ராஜகுமாரன் இயக்கிய நீ வருவாய் என படம் பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில் அஜீத்குமார் பார்த்திபன் ரமேஷ் கண்ணா தேவயானி விஜயகுமார் பாத்திமா பாபு சண்முகசுந்தரம் வையாபுரி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தை டைரக்ட் செய்த போது தேவயானிக்கும் ராஜகுமாரனுக்கும் இடையே காதல் ஏற்பட்டது.

பின்னர் விண்ணுக்கும் மண்ணுக்கும் என்ற படத்தை ராஜகுமாரன் இயக்கினார். இந்த படத்தில் சரத்குமார் குஷ்பு சியான் விக்ரம் தேவயானி உள்ளிட்டோர் நடித்தனர். இந்த படப்பிடிப்பின் போது இருவருக்கும் காதல் நெருக்கம் அதிகரித்த நிலையில், தனது பெற்றோரை மீறி தேவயானி ராஜகுமாரனை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகை தேவயானி கூறியதாவது, என்னுடைய வாழ்க்கையில் என் அம்மாவை மீறி நான் செய்த ஒரே ஒரு விஷயம் என் திருமணம்தான். நாளடைவில் அது சரியாகிவிடும் என நினைத்தேன். ஆனால் அது கடைசி வரை சரியாகவே இல்லை. என் முதல் குழந்தை பிறந்த போது கூட அம்மா என்னை வந்து பார்க்கவே இல்லை. அது மிகவும் மன வேதனையை ஏற்படுத்தியது.

எனக்கு இரண்டாவது குழந்தை பிறந்து சில ஆண்டுகள் கழித்து தான் என்னுடைய அம்மாவை நான் பார்த்தேன். நான் அம்மாவான பின்புதான், நான் செய்தது எவ்வளவு பெரிய தவறு என்று புரிந்தது. எல்லாம் என் தலையில் எழுதி இருக்கிறது. தலைவிதிப்படிதானே எல்லாம் நடக்கும் என்று நடிகை தேவயானி அந்த நேர்காணலில் வேதனையாக கூறியிருக்கிறார்.

சற்று முன்