பிரபல தொலைக்காட்சியில் எதிர்நீச்சல் சீரியலில் ஆதிகுணசேகரனாக நடித்து வந்த இயக்குனரும் நடிகருமான மாரிமுத்து நேற்று காலை தீடிரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்து போனார். இது திரையுலகினர் மற்றும் ரசிகர்களுக்கு இடையே பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது.
நேற்று காலை டப்பிங் ஸ்டுடியோவில் பேசிக்கொண்டு இருந்தபோது தீடிரென நெஞ்சு வலி ஏற்பட்டதாகவும் பத்து நிமிடம் ஓய்வு எடுத்து வருகிறேன் என்றும் தெரிவித்த நிலையில் நடிகர் மாரிமுத்துவிற்கு வலி முற்றியதால் தானாகவே காரை எடுத்து கொண்டு வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அட்மிட் ஆனார் என்று தெரிவிக்கப்பது.
இந்நிலையில் மருத்துவமனையில் மருத்துவர் கூறியதாவது: நடிகர் மாரிமுத்து வந்த சிலநிமிடங்களிலேயே வாயில் நுரை தள்ளி இறந்து போனதாகவும் மேலும் அவர்கள் வீட்டிற்கு தெரியப்படுத்தியதாகவும் கூறினார். அதனைத்தொடர்ந்து மாரிமுத்துவின் உடலை ஆம்புலன்ஸ் மூலம் வடபழனியில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று மக்கள் அஞ்சலி செலுத்துவதர்க்காக வைக்கப்பட்டது.
மேலும் நடிகர் மாரிமுத்து இறந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்த சக எதிர்நீச்சல் நடிகர்கள் மாரிமுத்துவின் வீட்டிற்கு வந்து அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். மேலும் திரையுலகினர் பலர் மாரிமுத்துவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். கவிஞர் வைரமுத்து செய்தி தொலைக்காட்சி ஒன்றின் மூலம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார். மேலும் பலர் சமூக வலைத்தளம் வாயிலாக தங்கள் இரங்கலை தெரிவித்தனர்.
மேலும் அதனை தொடர்ந்து நேற்று மாலை நடிகர் மாரிமுத்துவின் உடலை ஆம்புலன்ஸ் மூலம் அவரது சொந்த ஊரான தேனீ மாவட்டத்தில் உள்ள பசுமலை கிராமத்தில் தகனம் செய்ய எடுத்துச்செல்லப்பட்டது. அதனைத்தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டிருந்த நடிகர் மாரிமுத்துவின் உடலுக்கு அவரது உறவினர்கள், கிராம மக்கள், மற்றும் நடிகர் விமல் அஞ்சலி செலுத்தினார்கள்.
அதனைத்தொடர்ந்து நடிகர் விமல் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அண்ணன் மாரிமுத்துவிடம் அடிக்கடி போனில் பேசிக்கொள்வேன் நன்றாக பழக கூடிய மனிதர் என்றும் எனக்கு எதாவது மனவருத்தம் இருந்தால் அண்ணன் மாரிமுத்துவிடம் தெரிவிப்பேன். அண்ணனிடம் பேசினால் பேட்டரியில் சார்ஜ் ஏற்றினார் போல் ஆறுதலாக இருக்கும் என்றும் நடிகர் விமல் செய்தியாளர்களிடம் மிகவும் உருக்ககமாக தெரிவித்தார்.





