- Advertisement -
Homeபொழுதுபோக்குஏழை எளிய மக்களுக்காக இப்படி ஒரு திட்டத்தை செயல்படுத்தப் போகிறாரா சூப்பர் ஸ்டார் - உண்மையில்...

ஏழை எளிய மக்களுக்காக இப்படி ஒரு திட்டத்தை செயல்படுத்தப் போகிறாரா சூப்பர் ஸ்டார் – உண்மையில் இது வேற லெவல்தான் தலைவரே

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த், 1977ம் ஆண்டில் தமிழ் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். கடந்த 46 ஆண்டுகளை கடந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். குறிப்பாக சூப்பர் ஸ்டார் பட்டத்துடன் உச்ச நட்சத்திரமாக புகழின் உச்சியில் இருந்து வருகிறார். இப்போதும் 73 வயதில் ஹீரோவாக படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறார்.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என, கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக அவர்களது ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். பாட்ஷா படம் ரிலீஸ் ஆன போது, அப்போதைய பாரத பிரதமராக இருந்த அடல் பிகாரி வாஜ்பாய், அத்வானி போன்றவர்கள் ரஜினியை அரசியலுக்கு வருமாறு அழைத்தனர். தமிழக முதலமைச்சராக பதவியில் அமர வைக்க எல்லா உதவிகளையும் செய்ய முன்வந்தனர்.

ஆனால் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர மறுத்துவிட்டார். எனினும் தொடர்ந்து அரசியலுக்கு வருமாறு அழைத்தும், ரஜினி அசைந்து கொடுக்கவில்லை. இதற்கிடையே தமிழக மக்களால் இவ்வளவு உயரத்துக்குச் சென்ற ரஜினிகாந்த், அந்த மக்களுக்காக எதுவுமே செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. அது ஒரு விதத்தில் உண்மையும்தான்.

நடிகர் ரஜினிகாந்த்க்கு சென்னை போயஸ் கார்டனில் வீடு உள்ளது. அத்துடன் நீலாங்கரையிலும், தாம்பரத்தை அடுத்த படப்பையிலும், கேளம்பாக்கத்திலும், நிலம், வீடுகள், பண்ணைகள் உள்ளன. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த், நேற்று திருப்போரூரில் 12 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளார்.

சிறுசேரி மென்பூங்கா அருகில், நாவலூரில் ஓஎம்ஆர் சாலையில் இருந்து தாழம்பூர் செல்லும் சாலையில், 12 ஏக்கர் நிலத்தை ரஜினிகாந்த் வாங்கியுள்ளார். இந்த இடத்தை பத்திரப்பதிவு செய்வதற்காக ரஜினிகாந்த் நேற்று, திருப்போரூர் பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு நேரில் வந்தார். அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு இருந்தது.

காலை 9.45 மணிக்கு வந்த ரஜினிகாந்த், புகைப்படம் எடுக்கப்பட்டு பயோமெட்ரிக் முறையில் கைரேகை பதிவு செய்யப்பட்டது. மொத்தம் 12 ஏக்கர் நிலம் வாங்கியதற்காக 6 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு, ரஜினி 10.30 மணியளவில் அங்கிருந்த ரசிகர்களை பார்த்து கையசைத்துவிட்டு, புறப்பட்டுச் சென்றார். அந்த 12 ஏக்கர் நிலத்தில் ஒரு மருத்துவமனை கட்ட இருப்பதாகவும் அதில் ஏழை எளிய மக்களுக்கு இலவச மருத்துவமும், வசதியானவர்களுக்கு கட்டண மருத்துவமும் செய்ய ரஜினிகாந்த் திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

சற்று முன்