- Advertisement -
Homeபொழுதுபோக்குகாமெடி சூப்பர் ஸ்டாரா நீ என்று நேரடியாக கேட்ட ரஜினிகாந்த், வெலவெலத்து போன நடிகர் சந்தானம்...

காமெடி சூப்பர் ஸ்டாரா நீ என்று நேரடியாக கேட்ட ரஜினிகாந்த், வெலவெலத்து போன நடிகர் சந்தானம் – வசமாக சிக்க வைத்தது யார் தெரியுமா?

- Advertisement -

விஜய் டிவியில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் நடிகர் சந்தானம். அவரை சினிமாவுக்குள் அழைத்து வந்து தனது மன்மதன் வல்லவன் ஒஸ்தி போன்ற படங்களில் காமெடி ரோலில் நடிக்க வாய்ப்பளித்து உயர்த்தி விட்டவர் நடிகர் சிலம்பரசன்தான். அதனால் சிலம்பரசன் அவரது அப்பா டி ராஜேந்தர் மீது அதிக அன்பும் மரியாதையும் கொண்டவர் நடிகர் சந்தானம்.

சினிமாவில் இருக்கும் நடிகர்களில் ஒரு சில நடிகர்கள் தனது வயது சார்ந்த மற்ற நடிகர்களுடன் அதிக நட்பு கொண்டிருப்பது வழக்கம். அந்த வகையில் நடிகர் சந்தானத்தின் சினிமா நண்பர்களில் மிக நெருக்கமானவர் நடிகர் ஆர்யா. அதே போல் ஜெயம் ரவி விஷால் கார்த்தி ஜீவா ஆகியோருடன் நெருக்கமான நட்பு கொண்டவர் நடிகர் ஆர்யா.

- Advertisement -

நடிகர் ஆர்யாவுடன் சந்தானம் பாஸ் என்கிற பாஸ்கரன் சேட்டை வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க சிக்குபுக்கு உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கின்றனர். குறிப்பாக எம் ராஜேஷ் இயக்கிய பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ஆர்யா, சந்தானம் நடிப்பு பெரிய அளவில் ஹிட் ஆனது. இந்த படத்தில் இடம்பெற்ற நண்பேன்டா என்ற டயலாக் பெரிய அளவில் டிரண்டிங் ஆனது.

சின்னத்திரை நடிகர் நடிகைகளுக்கு விருது வழங்கும் விழாவில் நடிகர் சந்தானம் பங்கேற்றார். நடிகர் சந்தானம் மேடையில் பேசிய போது அவரது நெருங்கிய நண்பர் நடிகர் ஆர்யாவும் உடனிருந்தார். அப்போது நடிகர் சந்தானம் கூறியதாவது, நான் எந்திரன் படத்தில் நடித்துக் கொண்டிருந்த சமயத்தில் இந்த சம்பவம் நடந்தது.

- Advertisement -

நான் ஆர்யா அஞ்சலி ஹன்சிகா மோத்வானி பிரேம்ஜி எல்லாம் நடிச்ச படம் சேட்டை. டெல்லிபெல்லி என்ற இந்தி படத்தின் ரீமேக் படம் அது. அந்த படத்தில் என்னை காமெடி சூப்பர் ஸ்டார் என ஆர்யா டைட்டில் போட வைத்துவிட்டார். அப்போது நடிகர் ரஜினிகாந்த் என்னை பார்த்து, காமெடி சூப்பர் ஸ்டாரா நீ என்று நேரடியாக கேட்டுவிட்டார்.

பதறிப் போய் நான் நடிகர் ஆர்யாவை சந்தித்தேன். ஏண்டா இப்படி செஞ்சே என்று கேட்டேன். நான்தான் மச்சான் பண்ணினேன். உனக்கு நான்தாண்டா பண்ணனும். அதுதான் எனக்கு பெருமை என்றார். டேய் நீ எதுவுமே எனக்கு பண்ணாம இருடா, அதுவே போதும் என்று சொல்லி விட்டேன் என்று அந்த விழாவில் நடிகர் சந்தானம் வெளிப்படையாக பேசினார்.

- Advertisement -

சற்று முன்