- Advertisement -
Homeபொழுதுபோக்குசித்தர்களின் பவர் என்றால் என்ன தெரியுமா? திருவண்ணாமலையில் தனக்கு நேர்ந்த அனுபவத்தை சொன்ன நடிகர் ரஜினிகாந்த்!

சித்தர்களின் பவர் என்றால் என்ன தெரியுமா? திருவண்ணாமலையில் தனக்கு நேர்ந்த அனுபவத்தை சொன்ன நடிகர் ரஜினிகாந்த்!

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் ஒரு ஆன்மிகவாதி என்பது அனைவரும் அறிந்ததுதான். சமீபத்தில் ஒரு திரைப்பட விழாவில் பங்கேற்றுப் பேசிய நடிகர் ரஜினிகாந்த் கூறியதாவது, திருவண்ணாமலை சாதாரண இடம் கிடையாது. யோகிகளுக்கு எல்லாம் யோகி ரமண மகிரிஷிகள் வாழ்ந்த இடம். அவரை பெரிய பெரிய யோகிகள் எல்லாம் தரிசனம் பண்ண வந்திருக்காங்க. அந்த மகிரிஷியே சொல்லியிருக்கிறார். பூலோகத்தில் கைலாஷம் திருவண்ணாமலை.

திருவண்ணாமலை சாதாரண விஷயம் கிடையாது. அங்கே ஒரு விஷயம் நடந்தது. கடந்த 1996ம் ஆண்டில் சிவசூரியன் என்ற ஐஏஎஸ் ஆபீஸர் என்கிட்ட வந்து திருவண்ணாமலை கிரிவலம் நடைபாதையில் இருட்டா இருக்கு. அங்க கொஞ்சம் லைட் போடணும். அதுக்கு நன்கொடையா பணம் தேவை என்று சொன்னார்.

- Advertisement -

அப்போது நான் ஷூட்டிங் போகும் அவசரத்தில் இருந்ததால் பணம் கொடுக்க சொல்லிட்டு போயிட்டேன். அப்புறம் 2 நாள் கழிச்சு அதை பத்தி யோசிச்சேன். அவங்களுக்கு தேவையான பணம் கொடுத்தேனா, இல்லே கொறைச்சு கொடுத்தேனான்னு சந்தேகம் வந்துடுச்சு. உடனே அந்த சிவசூரியனை கூப்பிட்டு திருவண்ணாமலையில் லைட் போன என்ன செலவாகும்? மொத்த பட்ஜெட் என்ன என்று கேட்டேன்.

அதற்கு அவர், முதலில் உங்க கிட்ட இருந்து நன்கொடை வாங்க ஆரம்பிச்சிருக்கோம். இன்னும் பல பேர் கிட்ட நன்கொடை வாங்க திட்டமிட்டு உள்ளோம் என்றார். அதற்கு நான், இல்லே இல்லே லைட் போட மொத்த பணமும் நானே கொடுத்துடறேன். எவ்வளவு என்று சொல்லுங்க என்று சொன்னேன். அதை சொன்னவுடன் அவர் சிரித்து விட்டார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

- Advertisement -

ஏன் சிரிக்கறீங்க என்று கேட்டேன். அதற்கு அவர், நான் விசிறி சாமியார் ராம்சரத்குமாரின் சீடர். இப்படி திருவண்ணாமலையில் லைட் போடுகிறோம் என்று அவரிடம் சொன்ன போது, ஏன் யாரிடம் யாரிடமோ போய் பிச்சை எடுக்கறே? ரஜினிகிட்டே கேளு அவரே மொத்த பணமும் கொடுத்துடுவார் என்று சொன்னார். நான் அதை முதலிலேயே உங்களிடம் சொல்வதற்கு தயங்கினேன்.

ஆனால் இப்போது நீங்களே அழைத்து மொத்த செலவையும் நீங்களே ஏற்றுக் கொள்வதாக சொல்கிறீர்கள் என்று சொன்னார். இதுதான் சித்தர்களின் பவர். ஒருவர் மனசுக்குள் புகுந்து அவர்கள் என்ன சொல்ல வேண்டும் என்று தீர்மானிக்கும் அளவுக்கு சித்தர்கள் சக்தி படைத்தவர்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் அந்த விழாவில் பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்