நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் 2 படம் வருகிற 15ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்தில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன் வித்யாபாலன் எஸ்ஜே சூர்யா சுராஜ் வெஞ்சரமூடு மிதுன் சக்ரவர்த்தி யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
கடந்த 2023ம் ஆண்டில் வெளியான ஜெயிலர் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படம் 600 கோடி ரூபாய்க்கு வசூலை அள்ளிய நிலையில் ஜெயிலர் 2 படத்தை தயாரிக்க அப்போதே சன் பிக்சர்ஸ் நிறுவனம் முடிவு செய்தது. அதனால் ஏற்கனவே கமிட் ஆன வேட்டையன் லால் சலாம் கூலி படங்களை நடித்து முடித்த ரஜினிகாந்த் ஜெயிலர் 2 படத்திலும் நடித்து முடித்தார்.
ஜெயிலர் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. அதில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்கவில்லை. மைசூரில் தர்மன் படப்பிடிப்பில் அவர் பிஸியாக இருந்ததால் இந்த விழாவில் பங்கேற்கவில்லை. இந்த நிலையில் ஜெயிலர் 2 பிரமோசனுக்காக சூப்பர் ஷோ என்ற நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பங்கேற்றார்.
அந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது, இந்த படத்தில் தமன்னா மட்டும் மிஸ்ஸிங். நெல்சனிடம் எப்படியாவது ஒரு பாடலுக்கு தமன்னாவை இந்த படத்தில் பயன்படுத்துங்கள் என்று சொன்னேன். அதற்கு நெல்சன், உங்களுக்கு பிடிக்கும் என்பதற்காக எல்லாம் என்னால் தமன்னாவை நடிக்க வைக்க முடியாது சார் என்று கூறிவிட்டார்.
சார் நான் எனக்கு பிடிக்கும் என்பதற்காக கேட்கவில்லை. மக்களுக்கு பிடிக்கும் என்பதால் தான் கேட்டேன். நான் எனக்கு பிடித்ததை மட்டுமே செய்திருந்தால் இந்நேரம் பெங்களூருக்கு சென்று இருப்பேன். மக்களுக்கு பிடித்ததை செய்தால் தான் நான் இன்னும் திரைத்துறையில் நீடித்து இருக்கிறேன் என்று ரஜினிகாந்த் பேசினார்.
ஜெயிலர் படத்தின் முதல் பாகத்தில் தமன்னா நடனமாடிய காவலய்யா பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்தது. ஜெயிலர் இரண்டாம் பாகத்தில் தமன்னாவுக்கு பதிலாக பூர்ணா நோரா பதேஹி ஆகியோர் பாடல் காட்சிகளில் நடனமாடி இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதே போல் ரஜினிகாந்த் நடித்த கூலி படத்திலும் நடிகை பூஜா ஹெக்டே ஒரு பாடல் காட்சிக்க சிறப்பு நடனம் ஆடியிருந்தார்.





