- Advertisement -
Homeபொழுதுபோக்குகீர்த்தி சுரேஷூடன் அந்த படத்தில் நடிக்க மறுத்த நடிகர் துல்கர் சல்மான், அவரது முன்னிலையில் உண்மையை...

கீர்த்தி சுரேஷூடன் அந்த படத்தில் நடிக்க மறுத்த நடிகர் துல்கர் சல்மான், அவரது முன்னிலையில் உண்மையை போட்டுடைத்த பிரபல இயக்குனர் – இப்படி சிக்க உட்டுட்டாரே?

- Advertisement -

மலையாள நடிகையான கீர்த்தி சுரேஷ், தமிழில் பல வெற்றிப் படங்களில் நடித்தவர். ரெமோ, ரஜினி முருகன், அண்ணாத்த, சைரன் 108, தொடரி, நடிகையர் திலகம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் அவரது ரகுதாத்தா படம் வெளியாகி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. மகா நடி என தெலுங்கில் உருவான படம்தான், தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரில் வெளியானது. இந்த படத்தில் நடித்ததற்காக கீர்த்தி சுரேஷ், மத்திய அரசின் சிறந்த நடிகை தேசிய விருது பெற்றார்.

மலையாள நடிகர் துல்கர் சல்மான் தற்போது தெலுங்கில் முன்னணி நடிகராக மாறி வருகிறார். துவக்கத்தில் மலையாளத்திலிருந்து தமிழ் படங்களில் நடித்த அவர் பிறகு அப்படியே தெலுங்கு இந்தி படங்களில் நடித்து பன்மொழிக் கலைஞராக மாறி விட்டார். குறிப்பாக தமிழை விட தெலுங்கில் அதிக படங்களில் நடித்து வரும் துல்கர் சல்மானுக்கு தெலுங்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.

- Advertisement -

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் துல்கர் சல்மான் நடித்த சீதாராமம் படம் தெலுங்கு பட ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. சமீபத்தில் இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்த லக்கி பாஸ்கர் படம் கடந்த தீபாவளியன்று வெளியானது. இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இந்த படம் வெளியான 4 நாட்களில் 55 கோடி ரூபாய் வசூலித்து தொடர்ந்து ஹவுஸ்புல் காட்சிகளாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

லக்கி பாஸ்கர் படத்தின் சக்சஸ் மீட் நடந்தது. துல்கர் சல்மானை தெலுங்கில் முதன்முதலாக மகாநடி படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் நாக் அஸ்வின். இவர் கல்கி 2898 ஏடி படத்தின் இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது. லக்கி பாஸ்கர் படத்தின் சக்சஸ் மீட்டில் நாக் அஸ்வின் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், நான் சென்னையிலிருந்து துல்கர் சல்மானிடம் மகாநடி படத்தில் கதையை சொல்வதற்காக அவரை பார்க்கச் சென்றேன்.

- Advertisement -

ஆனால் அவர் கதையை கேட்கும் முன்பாகவே இந்த படத்தில் நடிக்க முடியாது எனக் கூறிவிட்டார். எனக்கு தெலுங்கு பேச வராது, அதனால் தெலுங்கு படங்களில் நடிக்க முடியாது. படம் பார்க்கும் ரசிகர்கள் என்னை கூர்மையாக கவனிப்பார்கள். இவருக்கு தெலுங்கு பேசவே தெரியவில்லையே என்று சொல்லி விட மாட்டார்களா என்று கேள்வி எழுப்பினார். ஆனால் நான் அவரை சமாதானம் செய்து மகாநடி படத்தில் நடிக்க வைத்தேன்.

இப்போது 6 ஆண்டுகளுக்குப் பிறகு 3 பிளாக்பஸ்டர் சேர்ந்த ஹாட்ரிக் வெற்றியை துல்கர் சல்மான் கொடுத்திருக்கிறார். இப்போது தெலுங்கு சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த தெலுங்கு சூப்பர் ஸ்டாராக உயர்ந்திருக்கிறார். இதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவருக்கு நன்றி என்று துல்கர் சல்மானை மேடையில் வைத்துக்கொண்டே இந்த தகவலை இயக்குனர் நாக் அஸ்வின் வெளியிட்டு இருக்கிறார். மகாநடி படத்தில் நாயகியாக நடித்தவர் கீர்த்தி சுரேஷ். அவருடன் நடிக்க மறுத்திருக்கிறாரே என்று ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்