- Advertisement -
Homeபொழுதுபோக்குமுன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் என்னிடம் சொன்ன அந்த விஷயம் - வேள்பாரி நூல் விழாவில்...

முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் என்னிடம் சொன்ன அந்த விஷயம் – வேள்பாரி நூல் விழாவில் ஓபனாக பேசிய நடிகர் ரஜினிகாந்த்!

- Advertisement -

மதுரை எம்பி சு வெங்கடேசன் எழுதிய வேள்பாரி என்ற நாவல் ஒரு லட்சம் பிரதிகளை கடந்து விற்பனை ஆகியுள்ளது. இதையொட்டி ஆனந்தவிகடன் சார்பில் நடந்த வெற்றிவிழாவில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இதில் இயக்குனர் ஷங்கர், நீயா நானா கோபிநாத் எழுத்தாளர் சு வெங்கடேசன் மற்றும் ஆனந்த விகடன் நிர்வாகிகளும் கலந்துக்கொண்டனர்.

விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது, இந்த விழாவிற்கு நடிகர் சிவகுமாரை அழைத்திருக்கலாம். அவர் பெரிய ஜீனியஸ். அதேபோல் நடிகர் கமல்ஹாசனை அழைத்திருக்கலாம். அவரும் பெரிய அறிவாளி. ஆனால் என்னை அழைத்து இருக்கிறார்கள். பல மாதங்களுக்கு முன்பு கலைவாணர் அரங்கில் நடந்த அமைச்சர் எவா வேலு புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டேன்.

அந்த விழாவில் அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் என நிறைய பேர் வந்திருந்தனர். எல்லாருமே நண்பர்கள்தான். அப்போது நான் பேசும்போது, ஓல்ட் ஸ்டூடன்ட்ஸ்சை சமாளிப்பது கடினம். அதெல்லாம் ரொம்பவும் கஷ்டம். பாஸ் ஆன பின்னாலும் அவர்கள் வகுப்பறையை விட்டு செல்ல மாட்டார்கள். வகுப்பறையிலேயே இருப்பார்கள் என்று கூறியிருந்தேன். அப்படி பேசிய போது ஓல்ட் ஸ்டூடண்ட் தான் தூண்கள்.

அவர்கள்தான் பவுண்டேஷன். அனுபவசாலிகள் இல்லை என்று சொன்னால் எந்த இயக்கமும் எந்த கட்சியும் தேறாது. அவர்கள் தூண்கள் மட்டுமல்ல, சிகரங்களும் கூட என்று நான் சொல்லலாம் என்று நினைத்தேன். ஆனால் எல்லோரும் சிரித்ததால் நானும் சொல்ல வந்ததை அப்போது சொல்ல மறந்து விட்டேன். இப்போது இந்த நிகழ்ச்சிக்கு வரும்போது மனதில், மிஸ்டர் ரஜினிகாந்த் அந்த மாதிரி எதுவும் மிஸ்டேக் பண்ணி விடாதே என்று சொல்லிக் கொண்டுதான் வந்தேன். மிகச் சரியாக பேச வேண்டும் என்றும் நினைத்தேன்.

கடந்த 1996ம் ஆண்டு நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தார். இரண்டு மூன்று முறை அவரை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவரிடம் பேசும் போது, மகாராஷ்டிராவில் மூன்று ஏக்கர் நிலம் வாங்கி இருக்கேன். பத்து மாடுகள் இருக்கிறது அங்கு 8,000க்கும் மேற்பட்ட புத்தகங்களை வாங்கி வைத்திருக்கிறேன். புத்தகங்களை படித்து விட்டு அங்கேயே இருக்க வேண்டும் என்பது என் ஆசை என்று கூறினார். அரசியலை விட அவர் சொன்ன அந்த விஷயம் என் மனசுக்குள் தங்கி விட்டது.

அதனால் 1996ம் ஆண்டிலிருந்து நல்ல புத்தகங்கள் கிடைத்தால் எடுத்து வைத்திருக்கிறேன். ஓய்வுக்கு பிறகு அந்த மாதிரி ஒரு இடத்தில் புத்தகங்களை படிக்க வேண்டும் என்பதே என் ஆசை. அதனால் நல்ல புத்தகங்களை படிக்கலாம் என்று எடுத்து வைத்திருக்கிறேன். கலை எந்த வடிவில் இருந்தாலும் அதை ரசிப்பதில் தமிழ் மக்கள் மன்னர்கள். ஜாதி மதம் பேதம் மொழி எதையும் பார்க்க மாட்டார்கள். கலைஞர்களை தலை மீது தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள். அதற்காக அவர்களது காலில் விழுந்து நான் வணங்குகிறேன் என்று நடிகர் ரஜினிகாந்த் அந்த விழாவில் பேசியிருக்கிறார்.

சற்று முன்