- Advertisement -
சமீபத்தில் ஒரு சமையல் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் ரவி மரியா கூறியதாவது, நான் லவ் பண்ணி தான் கல்யாணம் பண்ணினேன். என் பெயர் ரவி. என்னுடைய மனைவி பெயர் மரியா. என் மனைவியை எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனால என் பெயருக்கு அப்புறம் மரியான்னு சேர்த்து வெச்சுட்டேன். என் மனைவி எனக்கு 29 வருஷமா சமைச்சு சமைச்சு போட்டு இருக்காங்க. நான் சாப்பிட்டுட்டு மட்டும் தான் இருக்கேன். அவங்களோட கடைசி காலத்துல நான் அவங்களுக்கு சமைத்து போடணும்ன்னு ஆசை. அதுக்காக 5 படத்தை தள்ளி வைத்துவிட்டு செலிபரட்டி மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி மூலமாக நல்லா சமைக்க கத்துக்கலாம் என்று வந்தேன் என்று நடிகர் ரவி மரியா கூறியிருக்கிறார்.





