- Advertisement -
கடந்த 11ம் தேதி கிரீஸ் நாட்டில் நடந்த அனிருத் – காவ்யா மாறன் திருமணத்தில் நடிகர் ரஜினிகாந்த் லதா ரஜினிகாந்த் உள்ளிட்ட குடும்பத்தினர் பங்கேற்றனர். பிறகு தனது மகள்கள் பேரன்களுடன் கிரீஸ் நாட்டில் சில நாட்களை ஜாலியாக கழித்த ரஜினிகாந்த் சமீபத்தில் சென்னை திரும்பி விட்டார். இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் அவரை சந்தித்த போது அவர் கூறியதாவது, அடுத்த ஆண்டு வழக்கம் போல இமயமலைக்கு செல்வேன். தர்மன் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்துள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்பு வரும் 23ம் தேதி துவங்க உள்ளது என்று சிரித்தபடியே கூறினார்.





