- Advertisement -
Homeபொழுதுபோக்குமுதல்வரை கடுமையாக விமர்சித்ததால் என் மீது கற்களை வீசி தாக்கினார்கள்… கூட்டத்தில் சிக்கிய என்னை காப்பாற்றியது...

முதல்வரை கடுமையாக விமர்சித்ததால் என் மீது கற்களை வீசி தாக்கினார்கள்… கூட்டத்தில் சிக்கிய என்னை காப்பாற்றியது அவர்தான் – நடிகர் ரஜினிகாந்த் ஓபன்டாக்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகராக 50 ஆண்டுகளை நிறைவு செய்த கே. பாக்யராஜூக்கு பாராட்டு விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது, என் வாழ்வில் மறக்க முடியாத முக்கியமான நிகழ்வு ஒன்று இருக்கிறது. இந்த விழாவுக்கு நான் வந்ததற்கு முக்கிய காரணமே அதுதான். நிச்சயமாக அதை என்றாவது சொல்ல வேண்டும். மக்களுக்கு அது தெரிய வேண்டும் என்று காத்திருந்தேன். அதைச் சொல்ல வேண்டிய சரியான நேரம் இதுதான்.

கோபத்திற்கு ஆயுள் கம்மி. ஆனால் கோபத்தில் உதிர்க்கும் வார்த்தைகளுக்கு ஆயுல் அதிகம். அப்படி தான் 1995ம் ஆண்டில் நடிகர் சிவாஜிக்கு செவாலியே விருது வழங்கியதற்காக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அரசு மற்றும் சினிமாத்துறை சார்பில் பாராட்டு விழா நடந்தது. அதில் முதல்வர் ஜெயலலிதா முன்பு நான் கொஞ்சம் ஆவேசமாக பேசினேன். அது ஜெயலலிதாவுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. பலரது முகமே மாறிவிட்டது.

அந்த நிகழ்ச்சி முடிந்தபோது ஓபன் ஜீப்பில் ரசிகர்கள் முன்பு போக வேண்டி இருந்தது. ஆனால் முதல்வர் கோபமாக இருக்கிறார். போக வேண்டாம் என்று சிலர் எச்சரித்தினர். அதைக் கேட்காமல் நான் ஜீப்பில் ஏறி சென்றபோது சிலர் என் மீது கல் எறிந்தார்கள். எதிர்த்து கத்தினார்கள். அப்போது வெளியான பாட்ஷா படம் பெரிய ஹிட் ஆகி பலர் என்னை பார்க்க ஆர்வமாக இருந்ததாலும் அந்த சமயத்தில் என்னை சிலர் தலையில் அடித்தார்கள். சிலர் கிள்ளினார்கள். சிலர் திட்டினார்கள்.

அப்போது 3 பஸ்களில் வந்திருந்த நடிகர்கள் அனைவரும் அதற்குள் கிளம்பி போய் விட்டார்கள். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அப்போது தான் தூரத்திலிருந்து இயக்குனர் பாக்யராஜ் ஓடி வந்தார். அவர் என்னை உடனடியாக அழைத்துக் கொண்டு அங்கிருந்த போலீஸ் ஜீப்பில் ஏறச் சொன்னார். அருகே இருந்த போலீஸ் எஸ்ஐ அமைதியாக நின்று இருந்தார். முதல்வர் பற்றி நான் அப்படி பேசியதால் எங்கே எனக்கு உதவினால் அவர் வேலைக்கு ஆபத்து வருமோ என்று பயந்து நின்றிருப்பார் போல.

பாக்யராஜ் கோபமாக எஸ்ஐயை பார்த்து, ஒரு நடிகரை எல்லாரும் சேர்ந்து தள்ளிக்கொண்டு போகிறார்கள். நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா? எடுங்க ஜீப்பை. அவரை பத்திரமாக வீட்டில் கொண்டு போய் விடுங்க. இல்லையென்றால் விடமாட்டேன். நாளை மீடியாவில் சொல்லிடுவேன். பாதுகாப்பாக அவரை வீட்டில் விட வேண்டும் என்று சொன்னதும் பயந்து போய் அவர் என்னை ஜீப்பில் ஏற்றிக்கொண்டார்.

அப்போது பாக்யராஜ், சார் பூர்ணிமா அங்கே இருக்கிறார். நானும் கொஞ்ச நேரத்தில் வந்து விடுவேன். நீங்கள் வீட்டுக்கு போய் சேர்ந்ததும் எனக்கு போன் பண்ணுங்க என்று ஜாக்கிரதையாக பாதுகாப்பாக என்னை வீட்டுக்கு அனுப்பி வைத்தார். அதை என்னால் மறக்கவே முடியாது. அதற்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது. நல்ல மனிதர். அருமையான மனிதர். நீண்ட நாட்கள் நல்ல ஆயுள் ஆரோக்கியத்துடன் நல்லா இருக்க வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் அந்த விழாவில் பேசியிருக்கிறார். இது ரஜினி ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சற்று முன்