- Advertisement -
Homeபொழுதுபோக்குபுதுசு புதுசா கிளப்பி விடறாங்களேப்பா…, ரஜினிகாந்த் திடீரென இமயமலை புறப்பட்டுச் செல்ல அதுதான் காரணமாம் -...

புதுசு புதுசா கிளப்பி விடறாங்களேப்பா…, ரஜினிகாந்த் திடீரென இமயமலை புறப்பட்டுச் செல்ல அதுதான் காரணமாம் – இது உண்மையா, உருட்டான்னு தெரியலையே!

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த், தசெ ஞானவேல் இயக்கத்தில் இப்போது நடித்து முடித்துள்ள படம், வேட்டையன். இந்த படம் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாகவே திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து, இன்னும் சில வாரங்களில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கூலி படத்தின் ஷூட்டிங் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் லேட்டஸ்ட் தகவலாக, 38 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினியுடன், சத்யராஜ் இணைந்து நடிக்கிறார்.

வேட்டையன் படப்பிடிப்பை முடித்த பிறகு, அபுதாபி சென்ற நடிகர் ரஜினிகாந்துக்கு, ஐக்கிய அரபு அமீரகம் யுஏஐ சார்பில் கோல்டன் விசா வழங்கப்பட்டது. அங்கு சில முக்கிய கோவில்களுக்கு ரஜினிகாந்த் சென்று வந்த வகையில், அந்த புகைப்படங்களும் வீடியோக்களும் பெரிய அளவில் சமூக வலைதளங்களில் வைரலானது.

- Advertisement -

அதன்பிறகு உற்சாகமாக சென்னை திரும்பி நடிகர் ரஜினிகாந்த், மறுநாளே திடீரென இமயமலைக்கு புறப்பட்டுச் சென்றார். ஒரு வாரம் இமயமலையில் இருக்கப் போவதாகவும் பத்ரிநாத், கேதார்நாத், ரிஷிகேஷ் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல இருப்பதாகவும், தியானம் செய்ய இருப்பதாகவும், குறிப்பாக அங்குள்ள ஆசிரமங்களில் முக்கிய குருமார்களை வழக்கம்போல் சந்திக்கவும் ரஜினிகாந்த் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

ஆனால் நடிகர் ரஜினிகாந்த், திடீரென இமயமலைக்கு புறப்பட்டுச் செல்ல காரணமே, சென்னையில் அவர் இருக்க விரும்பாததும், சென்னையில் இருந்தால் சில தேவையற்ற விமர்சனங்களை சந்திக்க நேரிடும் என்பதாலேயே அவர் இமயமலை சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

- Advertisement -

டைரக்டர் ஷங்கர் இயக்கிய சிவாஜி, எந்திரன், ரோபோ 2.0 படங்களில் நடித்தவர் ரஜினிகாந்த். அதனால் ஷங்கருடன் அதிகளவில் நெருக்கம் கொண்டவர். மேலும், கமல்ஹாசன் அவரது நீண்டகால திரையுலக நண்பர். ஷங்கர் தயாரிப்பில், கமல் நடிப்பில் இந்தியன் 2 படம் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடக்கிறது.

அதில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துக்கொள்ளா விட்டால், நிச்சயமாக பலவித விமர்சனங்களுக்கு ஆளாக நேரிடும். அதே வேளையில் சென்னையில் இல்லை என்றால், அந்த விமர்சனங்களுக்கு வாய்ப்பிருக்காது என, அவர் இமயமலைக்கு திட்டமிட்டுச் சென்று விட்டதாக கூறப்படுகிறது. மேலும் லைகா புரடக்சன்ஸ் தயாரித்த லால் சலாம் படம் ஓடவில்லை. வேட்டையன் படத்தை லைகா தயாரித்த வகையிலும், ரஜினிக்கு சில சங்கடங்களை அந்நிறுவனம் தந்துள்ளது. அதனால் இந்தியன் 2 படத்தை தயாரித்த லைகா நிறுவனம் நடத்தும் நிகழ்ச்சியை தவிர்க்கவும் ரஜினி இமயமலை பயண திட்டத்தை மேற்கொண்டதாகவும் விமர்சனம் எழுந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்