- Advertisement -
Homeபொழுதுபோக்குசினிமாவில் வில்லன்களை துவம்சம் செய்யும் சூப்பர் ஸ்டார் - நிஜத்தில் கேரியருக்கு ஆப்பு வைக்கும் அவர்களால்...

சினிமாவில் வில்லன்களை துவம்சம் செய்யும் சூப்பர் ஸ்டார் – நிஜத்தில் கேரியருக்கு ஆப்பு வைக்கும் அவர்களால் நொந்துபோன ரஜினிகாந்த்

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த், தமிழ் சினிமாவில் உச்சாணி கொம்பில் சூப்பர் ஸ்டாராக இருந்து வருகிறார். அவரது இடத்தை யாராலும் நெருங்க முடியாத அளவுக்கு புகழ் பெற்று விளங்குகிறார். அதாவது விஜய், அஜீத் போன்றவர்கள் மாஸ் ஹீரோக்களாக இருந்தாலும், ரஜினி அடைந்திருக்கும் இடம் வேறுமாதிரியானது. நடிகர் என்பதையும் கடந்து, ரஜினிகாந்த் மீது மக்கள் கொண்டிருக்கும் அபிமானம்தான் அது.

பாட்ஷா படத்துக்கு பிறகு தொடர்ந்து படையப்பா, முத்து போன்ற வெற்றிப் படங்களை கொடுத்த ரஜினிக்கு பாபா படம் சரியாக போகவில்லை. இது அவரது சொந்த கதையாக ஆன்மிக நாட்டத்தில் எடுக்கப்பட்ட படமாக இருந்ததால் பிளாப் ஆனது. எனினும் மனம் தளராத ரஜினி, தயாரிப்பாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் அதற்கான தொகையை அவரே கொடுத்து அவர்களை நஷ்டத்தில் இருந்து காப்பாற்றினார்.

- Advertisement -

எனினும் அடுத்து, எந்திரன், 2.0, கபாலி, காலா, பேட்ட, அண்ணாத்த போன்ற படங்களில் நடித்தார். இதில் அண்ணாத்த படம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. எனினும் அடுத்த படமாக நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் ரஜினிக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. அடுத்த ஜெயிலர் 2 படத்திலும் நடிக்க ரஜினி திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில் ரஜினியை கேமியோ ரோலில் லால் சலாம் படத்தில் நடிக்க வைத்தார் அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா. தனது மகள் இயக்கும் படம் என்பதால், வேறு வழியின்றி ரஜினியும் நடிக்க சம்மதித்தார். மொய்தீன் கேரக்டரில் அவர் நடித்த அந்த படம், மிகப்பெரிய பிளாக் ஆகி விட்டது. இந்த படம் ஒரு தியேட்டரில் கூட, படம் ரிலீஸ் ஆன அன்று ஹவுஸ்புல் ஆகவில்லை என பலரும் கலாய்த்து வருகின்றனர்.

- Advertisement -

ஏற்கனவே கோச்சடையான் படத்தில் ரஜினியை நடிக்க வைத்து, அந்த படமும் பிளாப் ஆனது. அந்த படத்தின் டைரக்டர் ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா. இப்போது மீண்டும் செளந்தர்யா இயக்கும் ஒரு படத்துக்கு ரஜினியை கேமியோ ரோல் செய்ய அழைத்திருக்கிறார். ரஜினியும் 20 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார். ரஜினி கேமியோ ரோலில் நடித்தால், அது கண்டிப்பாக பிளாப் ஆகும் என வள்ளி, குசேலன், லால் சலாம் என 3 முறை நிரூபித்திருக்கிறது.

ஆனாலும் அவரது இரண்டு மகள்களும், அவர்கள் இயக்கும் படங்களில் ரஜினியை கேமியோ ரோலில் நடிக்க வைத்து, ரஜினி இமேஜை டேமேஜ் ஆக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவது, ரஜினி ரசிகர்களிடையே பலத்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தலைவர் சோலோ ஆக நடித்து பெர்பாமென்ஸில் பின்னி பெடலெடுத்து வருகிறார். இப்படி மகள்கள், அவரை கேமியோ ரோலில் டம்மியாக்கி காட்டி, அவரது கேரியரையே கெடுத்து வருகிறார்களே என ரசிகர்கள் பலரும் வாய்விட்டு புலம்பி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்