- Advertisement -
Homeபொழுதுபோக்குகிறிஸ்துமஸ் நாளில் என் வீட்டில் நடந்த துயரச் சம்பவம், நான் இனி பூஜ்ஜியம்தான், என்னால் இனி...

கிறிஸ்துமஸ் நாளில் என் வீட்டில் நடந்த துயரச் சம்பவம், நான் இனி பூஜ்ஜியம்தான், என்னால் இனி நடிக்க முடியாது – நடிகை திரிஷா அதிரடி அறிவிப்பு!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை திரிஷா. பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கேரக்டரில் நடித்த பிறகு தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆகி பிஸியாக நடித்து வருகிறார். எனினும் ஓய்வு நேரங்களில் நாய்கள், பூனைகள் போன்ற தனது செல்லப் பிராணிகளுடன் வீட்டில் நேரத்தை செலவிடுகிறார்.

நடிகை திரிஷா இன்னும் திருமணம் செய்து கொள்ளாத நிலையில், முரட்டு சிங்கிளாக வாழ்ந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதனால் பெரும்பாலும் செல்லப்பிராணிகளுடன் இருக்கும் வீடியோக்கள் புகைப்படங்களை அடிக்கடி தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு அந்த மகிழ்ச்சியை தனது ரசிகர்களுடன் ஷேர் செய்து வருகிறார்.

- Advertisement -

அவருக்கு செல்லப் பிராணிகளான நாய்கள், பூனைக்குட்டிகள் மீது அதிகளவில் பிரியமும் பாசமும் இருக்கிறது. தெரு நாய்களை தத்தெடுத்து வளர்க்குமாறு எப்போதும் தனது ரசிகர்களை அவர் ஊக்குவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஜோரோ என்னும் நாய்குட்டியை செல்லமாக த்ரிஷா வளர்த்து வந்தார். அந்த நாயுடன் அடிக்கடி அவர் கொஞ்சி விளையாடும் காட்சிகளை வீடியோவாக புகைப்படங்களாக எடுத்து நடிகை திரிஷா அவ்வப்போது இணையத்தில் வெளியிட்டு வந்தார்.

இந்த புகைப்படங்களுக்கு அவரது ரசிகர்களும் அவருக்கு லைக் கொடுத்து உற்சாகப்படுத்தி வந்தனர். இந்நிலையில் இன்று காலை அந்த ஜோரோ என்ற நாய்க்குட்டி இறந்து விட்டது. இதனை வருத்தமுடன் தனது இணையதள பக்கத்தில் தெரிவித்துள்ள நடிகை திரிஷா, எனது மகன் ஜோரோ கிறிஸ்துமஸ் தினமான இன்று அதிகாலையில் உயிரிழந்தான். இனிமேல் என் வாழ்க்கை பூஜ்ஜியம் என்பது என்னை நன்கு அறிந்தவர்களுக்கு தெரியும்.

- Advertisement -

நானும் எனது குடும்பமும் அதிர்ச்சியில் உடைந்து போய் உள்ளோம். சிறிது காலம் பணியில் இருந்து விலகி இருக்க உள்ளேன் எனவும் அந்த பதிவில் திரிஷா தெரிவித்துள்ளார். அதாவது தனது செல்ல நாய்க்குட்டி ஜோரோ மறைவின் காரணமாக சினிமாவில் இனி சிறிது காலத்துக்கு நடிக்க மாட்டேன், பணியில் இருந்து விலகி இருக்க உள்ளேன் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

இப்போது நடிகை திரிஷா, அஜித்குமாருடன் உட்பட விடாமுயற்சி குட்பேட் அக்லி படங்களில் நடித்து முடித்து விட்டார். கமல், சிம்பு நடித்த தக்லைப் படத்திலும் நடித்து விட்டார். ஆனால் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யாவுடன் அவரது 45வது படத்தில் நடித்து வருகிறார். ஒருவேளை இவர் சிறிது காலம் என்று குறிப்பிடுவது புத்தாண்டு, பொங்கல் பண்டிகை கழித்து சூட்டிங்கில் கலந்து கொள்வாரா என்ற கேள்வியை ரசிகர்களுக்கு எழுப்பி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்