- Advertisement -
Homeபொழுதுபோக்கு1000 ரூபா கொடுத்து படம் பார்க்கறவன் படம் நல்லா இல்லேன்னா திட்டதான் செய்வான், பிரபல காமெடி...

1000 ரூபா கொடுத்து படம் பார்க்கறவன் படம் நல்லா இல்லேன்னா திட்டதான் செய்வான், பிரபல காமெடி நடிகர் ஆவேசம் – சூர்யாவோட நடிச்சவரே இப்படி பேசிட்டாரே?

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ரமேஷ் கண்ணா. ஆண்பாவம் படத்தில், தவறுதலாக பெண் பார்க்க வந்த பாண்டியன் குறித்து, ரமேஷ் கண்ணா வந்து பார்த்துதான் பெண் வீட்டாருக்கு உண்மை தெரிய வரும். கேஎஸ் ரவிக்குமாரிடம் பல படங்களில் உதவி இயக்குனராக ரமேஷ் கண்ணா பணி செய்தவர். அதனால் பிஸ்தா, முத்து போன்ற படங்களில் கேமியோ ரோலில் ஒரு காட்சியில் மட்டும் நடித்திருப்பார்.

ஆனால் படையப்பா படத்தில், ரஜினியின் நண்பர்களில் ஒருவராக படம் முழுக்க ரஜினியுடன் வரும்படி கேஎஸ் ரவிக்குமார் அவருக்கு வாய்ப்பு தந்திருப்பார். இயக்குனர் ராஜகுமாரன் இயக்கிய விண்ணுக்கும் மண்ணுக்கும் படத்தில் டைரக்டராகவே ரமேஷ் கண்ணா நடித்திருந்தார். கேஎஸ் ரவிக்குமார் இயக்கிய ஆதவன் படத்தின் கதை, திரைக்கதை ரமேஷ் கண்ணா எழுதிய என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

நடிகர் சூர்யாவுடன் பிரண்ட்ஸ் படத்தில் ரமேஷ் கண்ணா நடித்திருப்பார். அதில் விஜய், சூர்யா, ரமேஷ் கண்ணா என 3 பேரும்தான் நெருங்கிய நண்பர்களாக இருப்பார்கள். அதே போல் விக்ரமன் இயக்கிய உன்னை நினைத்து படத்திலும் சூர்யாவுக்கு நண்பராக ரமேஷ் கண்ணா நடித்திருந்தார். அஜீத்குமார், தேவயானி நடித்த தொடரும் என்ற படத்தின் இயக்குனர் ரமேஷ் கண்ணாதான்.

பல படங்களில் காமெடி ரோலில் ரமேஷ் கண்ணா நடித்திருக்கிறார். குறிப்பாக உதவி இயக்குனராக இருந்த ரமேஷ் கண்ணாவை, இயக்குனர் விக்ரமன் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் என்ற நவரச நாயகன் கார்த்திக் நடித்த படத்தில் காமெடி ரோலில் அறிமுகப்படுத்தினார். அந்த படத்தின் பெரிய வெற்றிக்கு பிறகுதான் ரமேஷ் கண்ணா பல படங்களில் தொடர்ந்து நடித்தார்.

- Advertisement -

இந்நிலையில் சமீபத்தில் வெளியான கங்குவா படம் குறித்து இயக்குனர், நடிகர் ரமேஷ் கண்ணா கடுமையாக விமர்சித்துள்ளார். நடிகர் சூர்யாவுடன் நெருங்கிய நண்பராக நடித்த அவர், இப்படி வெளிப்படையாக கங்குவா படம் குறித்து விமர்சித்திருப்பது சூர்யா ரசிகர்கள் மத்தியில் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ரமேஷ் கண்ணா கூறியதாவது, கங்குவா படம் நல்லா இல்லைதான். அவ்வளவு மோசமான படமாக இருக்குது. 1000 ரூபா கொடுத்து குடும்பத்தோட படம் பார்க்கறவன் படம் நல்லா இல்லேன்னா திட்டதான் செய்வான். ஒன்றரை நாள் வேலை செஞ்சு அதுல வந்த காசுல படம் பார்த்துட்டு படம் நல்லா இல்லேன்னா, அவனை ஏண்டா திட்டறேன்னு கேட்க முடியாது. அப்படி கேட்கவும் கூடாது என்று அவர் கூறியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்