நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இந்த ஆண்டு துவக்கத்தில் வெளியான படம் லால் சலாம். இந்த படத்தை ரஜினியின் மூத்த மகள், நடிகர் தனுஷின் முன்னாள் மனைவி ஐஸ்வர்யா இயக்கியிருந்தார். ஏற்கனவே அவரது இயக்கத்தில் வெளியான 3, வை ராஜா வை படங்கள் பிளாப் ஆன நிலையில், லால் சலாம் படமும் பயங்கரமான பிளாப் படமாக இருந்தது.
அதே நேரத்தில் கடந்தாண்டில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் பெரிய வெற்றிப் படமாக, பாட்ஷா படம் போல ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. நெல்சன் இயக்கிய ஜெயிலர் படம் 550 கோடி ரூபாய் வசூல் சாதனை புரிந்தது. இந்த படத்தின் வெற்றிக்கு அனிருத் இசையும், தமன்னாவின் காவலய்யா குத்தாட்டமும் பெரிய அளவில் கை கொடுத்தது.
குறிப்பாக ஜெயிலர் படத்தில் வில்லனாக நடித்த விநாயகம் நடிப்பு வேற லெவலில் இருந்தது. மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப், தெலுங்கு நடிகர் சுமன் ஆகியோர் கேமியோ ரோலில் நடித்து படத்தை இன்னும் பெரிய அளவில் கொண்டு சென்றனர்.
ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பிறகு, முதல் தடவையாக ரஜினி, தனது படத்தின் 2ம் பாகத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. நெல்சன் இயக்குகிறார். அடுத்த ஆண்டில் ரஜினியின் தமிழ் சினிமா பொன்விழா ஆண்டு வருகிறது. அதாவது 1975ம் ஆண்டில் தமிழ் சினிமாவில் அறிமுகமான ரஜினி, வரும் 2025ம் ஆண்டில் பொன்விழா கொண்டாடுகிறார்.
அதனால் 2025ம் ஆண்டில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி, நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 என அடுத்தடுத்த படங்களை ரிலீஸ் செய்து, தனது ரசிகர்களுக்கு பொன்விழா ஸ்பெஷல் ட்ரீட் தந்து விட ரஜினிகாந்த் திட்டமிட்டு இருந்தார். ஆனால் தற்போது நெல்சன் அந்த விஷயத்தில் ரஜினிக்கு ஏமாற்றத்தை தந்துவிட்டார்.
ஜெயிலர் 2 படப்பிடிப்புக்கு 13 மாதங்கள் வேண்டும் என்றும், அடுத்த 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில்தான் ஜெயிலர் 2 படத்தை ரிலீஸ் செய்ய முடியும் என்றும் கண்டிஷனாக கூறி விட்டார். ஏனெனில் பான் இந்தியா படமாக உருவாகும் ஜெயிலர் 2, இந்தியன் 2 போல சொதப்பி விடாமல் பெரிய அளவில் புஷ்பா 2 போல ரசிகர்களால் கொண்டாடப்படும் படமாக இருக்க வேண்டும் என்றும் கூறி, சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறனிடம் பேசியிருக்கிறார். அதனால் ரஜினியின் டபுள் ட்ரீட் பிளான் தவிடு பொடியானதால், ரஜினி ரசிகர்கள் பலத்த ஏமாற்றத்தில் உள்ளனர்.





