சூர்யா கருப்பு திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். ஆர் ஜே பாலாஜி இயக்கி இருக்கும் இந்தத் திரைப்படத்தில் திரிஷா, லப்பர் பந்து சுவாசிகா உள்ளிட்ட ஏராளமானோர் நடித்திருக்கிறார்கள். பேண்டஸி கலந்த ஆன்மீக திரைப்படமாக இது எடுக்கப்பட்டிருக்கிறது. இதன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் தீபாவளிக்குள் இந்த திரைப்படம் வந்துவிடும் என்று முதலில் பேசப்பட்டது.
ஆனால் அதற்கான வாய்ப்பை படக்குழு தவறவிட்டது என்றே கூற வேண்டும். சில பல பேட்ச் ஒர்க் பணிகள் இருந்ததால், கருப்பு திரைப்படத்தின் பணிகள் தள்ளிப் போயின. சூர்யாவின் பிறந்தநாளுக்கு மட்டும், படத்தில் இருந்து ஒரு சிறிய வீடியோ வெளியானது. அனேகமாக கருப்பு திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம்தான் வெளியாகும் என்று சிலர் பேசுகிறார்கள்.
இப்படியான சூழலில் தற்போது அந்த திரைப்படத்திலிருந்து, முதல் பாடல் தீபாவளியை முன்னிட்டு நாளை வெளியாகிறது. God mode என தொடங்கும் அந்தப் பாடலின் ப்ரோமோ தற்போது ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. சாய் அபயங்கர் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். சூர்யாவின் தோற்றமும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை சற்று கூட்டி இருக்கிறது.
கருப்பு திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா அடுத்ததாக வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே வெங்கி, தமிழில் தனுசை வைத்து வாத்தி திரைப்படத்தை எடுத்திருந்தார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. அதேசமயம் அந்த திரைப்படத்தில் இசையமைத்ததற்காக, ஜிவி பிரகாசுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.
வாத்தி திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக வெங்கி அட்லூரி, துல்கர் சல்மானை வைத்து லக்கி பாஸ்கர் திரைப்படத்தை இயக்கினார். எந்த ஒரு எதிர்பார்ப்புமே இல்லாமல் ரிலீஸ் செய்யப்பட்ட இந்த திரைப்படம், அருமையான விமர்சனத்தை பெற்றது. பான் இந்தியா திரைப்படமாக வெளியாகி ஒவ்வொரு மாநிலங்களிலும் ஹிட் அடித்தது. இதன் பிறகுதான் சூர்யாவுடன் இணைந்து அடுத்த திரைப்படத்தை வெங்கி எடுத்து வருகிறார். இதில் கதாநாயகியாக மமீதா பைஜூ நடித்து வருகிறார்.
குடும்ப உறவுகளை மையப்படுத்தி இந்த திரைப்படத்தின் கதை எடுக்கப்பட்டு வருகிறது. ராதிகா படத்தில் நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது. விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் என இந்த திரைப்படத்திற்கு வெங்கி தலைப்பு வைத்திருப்பதாகவும் பேசுகிறார்கள். இந்த நிலையில் தெலுங்கின் முக்கிய நட்சத்திரமான ரவி தேஜாவின் மகன் இந்த திரைப்படத்தில், உதவி இயக்குனராக பணிபுரிந்து வருகிறாராம். இந்த தகவல் அவரது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. அப்படி என்றால் விரைவில் ரவி தேஜா மகன் இயக்கத்தில் ஒரு தரமான படத்தை எதிர்பார்க்கலாம் என்று பலரும் இணையத்தில் கூறி வருகின்றனர்.





