- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் நடித்த படங்கள் குறித்து விமர்சித்த ரஜினிகாந்த்… எனக்கு அது ரொம்ப அவமானமாக இருக்கும்...

நான் நடித்த படங்கள் குறித்து விமர்சித்த ரஜினிகாந்த்… எனக்கு அது ரொம்ப அவமானமாக இருக்கும் – காமெடி நடிகர் யோகிபாபு ஓபன் ஸ்டேட்மென்ட்!

- Advertisement -

நடிகர் யோகிபாபு ஆரம்பத்தில் சில படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்தார். பிறகு சுந்தர் சி இயக்கிய சில படங்களில் அவருக்கு நல்ல முக்கியத்துவம் தரப்பட்டது. குறிப்பாக மணிகண்டன் இயக்கிய காக்கா முட்டை படத்தில் கிளைமாக்சில், நடிகர் ரமேஷ் திலக்கிடம் எனக்கே விபூதி அடிக்க பார்த்தே இல்லே நீ? என்ற டயலாக் பெரிய அளவில் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தது.

அந்த காலகட்டத்தில் காமெடி நடிப்பில் பிஸியாக இருந்த வடிவேலு சினிமாவை விட்டு விலகியிருந்தார். காமெடி நடிப்பில் அசத்திக்கொண்டு இருந்த சந்தானம் ஹீரோவாக நடிக்க துவங்கி விட்டார். காமெடி பஞ்சம் நிலவிய தமிழ் சினிமாவில் யோகிபாபு தோற்றமும் டயலாக் டெலிவரியும் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்ததால் காமெடி நடிகராக அவர் பல படங்களில் நடித்து வெளிச்சத்துக்கு வந்தார்.

- Advertisement -

இதில் காக்கி சட்டை ரெமோ தர்பார் சர்கார் வாரிசு கலகலப்பு பீஸ்ட் போன்ற பல படங்களில் நடித்த யோகிபாபு மண்டேலா தர்மபிரபு கூர்கா போன்ற படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்து அதிக கவனம் பெற்றார். குறிப்பாக கோலமாவு கோகிலா டாக்டர் ஜெயிலர் போன்ற படங்களில் யோகிபாபு நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது.

இந்நிலையில் ஜெயிலர் படத்தை தொடர்ந்து ஜெயிலர் 2 படத்திலும் நடிகர் யோகிபாபு ரஜினிகாந்துடன் இணைந்து நடித்து வருகிறார். இந்த படப்பிடிப்பின் போது, ஜெயிலர் படத்தில் சில காட்சிகளில் யோகிபாபு என்னை கலாய்த்து விட்டார். ஜெயிலர் 2 படத்தில் அவரை பழிக்கு பழி வாங்காமல் விட மாட்டேன் என்று படப்பிடிப்பில் ரஜினி விளையாட்டாக கூறியதை யோகிபாபுவே கூறியிருந்தார்.

- Advertisement -

இப்போது ஜெயிலர் 2 படப்பிடிப்பில் நடந்த மற்றொரு சம்பவம் குறித்து நடிகர் யோகிபாபு கூறியதாவது, தர்பார் படத்திலிருந்து ரஜினியுடன் பல படங்களில் நடித்து வருகிறேன். இதுவரை 4 முறை ரஜினியை நேரில் சந்தித்து உள்ளேன். இப்போது நானும் நெல்சனும் ஜெயிலர் 2 ஷூட்டிங்கில் இருக்கும்போது ரஜினி அடிக்கடி வந்து பேசுவார்.

ஒருமுறை ரஜினிகாந்த் வந்து நெல்சனிடம் கோலமாவு கோகிலா படத்தை 4 முறை பார்த்தேன் என்று கூறுவார். அதே போல் மண்டேலா படம் பார்த்தேன் என்றும் சொல்வார். அவருக்கு என் நடிப்பில் இந்த 2 படங்களும் மிகவும் பிடிக்கும். அதே சமயம் நான் நடித்த இன்னும் சில படங்களை பார்த்துவிட்டு கொஞ்சம் அப்படி இருந்தது என்று விமர்சனம் செய்வார். உடனே எனக்கு அய்யய்யோ இப்படி காறி துப்பிவிட்டாரே என்று தோன்றும் என்று நடிகர் யோகி பாபு வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்