- Advertisement -
Homeபொழுதுபோக்குஅஜித்துடன் ஆதிக் ரவிச்சந்திரன் இணைவது உறுதியானதா?.. எப்படி தெரியுமா?.. ரசிகர்கள் குழப்பம்

அஜித்துடன் ஆதிக் ரவிச்சந்திரன் இணைவது உறுதியானதா?.. எப்படி தெரியுமா?.. ரசிகர்கள் குழப்பம்

- Advertisement -

அஜித் நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் வெளியானது. அந்தத் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இதனையடுத்து அவர் விடாமுயற்சி படத்தில் கமிட்டானார். லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் மகிழ் திருமேனியின் இயக்கத்தில் இந்தப் படம் உருவாகவிருக்கிறது. அஜித் பிறந்தநாளையொட்டி படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டதை அடுத்து ஒரு அப்டேட்டும் வெளியாகவில்லை.

இதனால் வலிமை அப்டேட்டுக்கு எப்படி ஏகே ரசிகர்கள் காத்திருந்தார்களோ அதைவிட அதிகமாகவே விடாமுயற்சி அப்டேட்டுக்கு காத்திருக்க ஆரம்பித்திருக்கிறார்கள். பல முறை சமூக வலைதளங்களில் லைகா நிறுவனத்தை டேக் செய்தும் கேட்டுப்பார்த்துவிட்டனர். ஆனால் லைகா தரப்பிலிருந்து மௌனம் மட்டுமே பதிலாக இருக்கிறது.

நிலைமை இப்படி இருக்க விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.ஆனால் படத்தயாரிப்பு தரப்பிலிருந்து அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இதனால் அந்தத் தகவலை அஜித் ரசிகர்கள் நம்பலாமா வேண்டாமா என குழம்பியிருக்கின்றனர். ஆனால் அஜர்பைஜானில் விடாமுயற்சி ஷூட்டிங் தொடங்கியது உண்மைதான் என திரைத்துறையினர் கூறுகின்றனர்.

அந்த ஷூட்டிங்கில் த்ரிஷா உள்ளிட்டோர் கலந்துகொண்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக படத்துடைய ஷூட்டிங்கின்போது விடாமுயற்சி கலை இயக்குநர் மிலன் உயிரிழந்தார். அதனால் இப்போது ஷூட்டிங்கிற்கு பிரேக் விடப்பட்டிருக்கிறதாம். மிலன் உயிரிழந்ததை அடுத்து அவரது மகன் படத்துக்கான கலை டிப்பார்ட்மெண்ட்டை கவனிப்பார் என தெரிகிறது.

விடாமுயற்சியின் நிலவரம் இப்படி இருக்க அஜித்தின் 63ஆவது படம் பற்றிய தகவல் ஒன்று கடந்த சில நாட்களாகவே உலாவிக்கொண்டிருக்கிறது. அதன்படி அந்தப் படத்தை மார்க் ஆண்டனி படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குவதாக கூறப்படுகிறது. அதாவது நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தபோது அஜித்திடம் ஆதிக் ஒன்லைன் ஒன்றை சொன்னதாக கூறப்படுகிறது.

தற்போது மார்க் ஆண்டனி படத்தின் ஹிட்டை கவனித்த அஜித்குமார் ஆதிக்கை அழைத்து அந்த ஒன்லைனை டெவலப் செய்யுமாறு சொன்னதாகவும் அதற்கான முதற்கட்ட பணிகளில் ஆதிக் இறங்கியிருப்பதாகவும் பேசப்படுகிறது. இந்நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தின் கவர் ஃபோட்டோவாக அஜித்துடைய கண் புகைப்படத்தை வைத்திருக்கிறார். இதனைப் பார்த்த ரசிகர்கள் அஜித்துடன் இணைவதை இந்தப் படத்தின் மூலம் ஆதிக் உறுதிப்படுத்திவிட்டாரோ என்று கூறிவருகின்றனர்.

சற்று முன்