விஜய் டிவியில் கடந்த 2007ம் ஆண்டு முதல் பிக்பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி நடந்து வருகிறது. முதலில் நடிகர் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். 2023ம் ஆண்டு வரை 7 ஆண்டுகள் அவரே அந்த பணியை செய்து வந்த நிலையில் ராஜ்யசபா எம்பி ஆன பிறகு இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகிக்கொண்டார்.
அதன்பிறகு கடந்த 2 ஆண்டுகளாக நடிகர் விஜய் சேதுபதி பிக்பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. தொடர்ந்து 3வது ஆண்டாக இந்த முறையும் அவரே தொகுப்பாளராக பங்கேற்க உள்ளார். நாளை 6ம் தேதி மாலை 6 மணிக்கு பிக்பாஸ் தமிழ் சீசன் 10 துவங்க உள்ளது. தொடர்ந்து 100 நாட்களுக்கு மேல் இது தொடர உள்ளது.
வழக்கமாக சினிமா நடிகர் நடிகைகள் டிவி சீரியல் நடிகர் நடிகைகள் மாடல் துறை சார்ந்தவர்கள் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக நடிகர் நடிகைகள் வெகுவாக குறைந்து யூடியூப் இன்ஸ்டாகிராம் மூலம் பிரபலமானவர்கள் இதில் அதிக எண்ணிக்கையில் போட்டியாளர்களாக பங்கேற்று வருகின்றனர்.
அதிலும் இந்த முறை பிக்பாஸ் காமன்மேன் நிகழ்ச்சி மூலம் பொதுமக்களில் சிலரையும் தேர்வு செய்து பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்ப உள்ளனர். கிரிக்கெட் வீரர் விஜய் முரளி சீரியல் நடிகை ஆலியா மானசா போன்றவர்களின் பெயர்களும் போட்டியாளர்களாக வர வாய்ப்புள்ளது. எனினும் நாளை மாலை தான் இது உறுதியாக தெரிய வரும்.
வழக்கம் போல் இந்த முறையும் பிக்பாஸ் வீட்டுக்குள் சண்டை சச்சரவுகள் பிரச்னைகளுக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கலாம். ஏனென்றால் பிக்பாஸ் வீட்டுக்குள் ஏற்படும் சர்ச்சைகளும் பிரச்னைகளும்தான் அந்த நிகழ்ச்சியை விறுவிறுப்பாக்கி டிஆர்பி ரேட்டிங்கை அதிகரிக்க செய்யும். கடந்த முறை பார்வதி கம்ருதீன் சாண்ட்ரா திவாகர் போன்றவர்களால் நிகழ்ச்சி விறுவிறுப்பாக இருந்தது.
விஜய் டிவியில் நாளை மாலை சரியாக 6 மணிக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்க உள்ளது. இதில் வழக்கம் போல போட்டியாளர்களை அறிமுகப்படுத்தி வீட்டுக்குள் விஜய் சேதுபதி அனுப்பி வைக்க உள்ளார். இதில் பிக்பாஸ் மேடையிலேயே ஒரு போட்டியாளரை விஜய் சேதுபதி எலிமினேட் செய்வார் என்றும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அறிமுக மேடையிலேயே போட்டியாளரை எலிமினேட் செய்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.





