தமிழ் சினிமாவில் ஜெயம் என்ற படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் ரவி. இந்த படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு அவர் தனது பெயரை ஜெயம் ரவி என மாற்றிக் கொண்டார். தொடர்ந்து அவர் நடித்த பல படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. ஆனால் சில ஆண்டுகளாக அவரது படங்கள் எதுவும் வரவேற்பை பெறவில்லை. சமீபத்தில் அவர் தனது ஜெயம் ரவி என்கிற பெயரை ரவி மோகன் என மாற்றிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
திரைப்பட தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகள் ஆர்த்தியை நடிகர் ரவிமோகன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ரவி – ஆர்த்திக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆன நிலையில் கடந்த ஆண்டு தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக ரவி மோகன் அறிவித்தார்.
மேலும் இதுகுறித்து விவாகரத்து வழக்கும் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது. இப்போதும் நடிகர் மோகன் ரவி பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும் மும்பையில் செட்டிலாகி விட்ட அவர் தனது படப்பிடிப்புக்காக மட்டுமே சென்னைக்கு வந்து செல்வதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் ரவி – ஆர்த்தி இருவரும் பிரிவுக்குப் பின்னர் பாடகியும் ஹீலருமான கெனிஷா பிரான்சிஸ் என்பவரை நடிகர் ரவி மோகன் காதலித்து வருவதாக கிசுகிசு பரவியது. அவர்களுக்கு இடையிலான காதல்தான் ஆர்த்தியை நடிகர் ரவிமோகன் பிரிவதற்கு முக்கிய காரணம் என்றும் அப்போது தகவல் பரவியது. தொடர்ந்து கெனிஷாவுடன் இணைந்து பயணிக்க உள்ளதாக நடிகர் ரவி மோகன் ஒரு பிரஸ்மீட்டில் பேசியிருந்தார். அதுவும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால் மனைவியை பிரிந்த ரவி மோகன், பெரும்பாலும் அவர் பொது நிகழ்ச்சிகள், சினிமா நிகழ்ச்சிகளுக்கு தனியாக தான் வந்துக்கொண்டிருந்தார். கெனிஷாவுடன் அவர் பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து கொள்ளாமல் இருந்தார். நாங்கள் இருவரும் நண்பர்கள்தான் என்று மட்டுமே ரவி மோகன் சொல்லி வந்தார்.
இந்நிலையில் திரைப்பட தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இல்ல திருமண விழா நேற்று நடந்தது. இதில் நடிகர் ரவி மோகன் கெனிஷா இருவரும் ஒன்றாக வந்து கலந்து கொண்டனர். இருவரும் புதுமணத்தம்பதி போல ஒரே மாதிரியான பளபளப்பான பட்டாடையில் வந்திருந்தனர். இருவரும் முறைப்படி திருமணம் செய்து கொண்டார்களா அல்லது லிவிங் டு கெதர் ஆக வாழ்ந்து வருகிறார்களா அல்லது இனிமேல் தான் திருமணம் செய்துக்கொள்ள போகிறார்களா என்ற பல கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.





