- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்த விஷயத்தை சும்மா விடமாட்டேன், அவங்க 3 பேர் மீதும் மான நஷ்ட ஈடு கேட்டு...

இந்த விஷயத்தை சும்மா விடமாட்டேன், அவங்க 3 பேர் மீதும் மான நஷ்ட ஈடு கேட்டு வழக்குப் போடுவேன் – மீண்டும் துள்ளி எழுந்த நடிகர் மன்சூர் அலிகான்

- Advertisement -

கடந்த வாரம் முழுவதும் சமூக வலைதளங்களில் பற்றி எரிந்த விவகாரம், லியோ படத்தில் திரிஷாவுடன் சேர்ந்து நடிக்க முடியவில்லை என மன்சூர் அலிகான் கிண்டலாக சொன்ன விஷயம்தான், பூதம் போல விஸ்வரூபம் எடுத்தது. அதுவும் திரிஷா எழுப்பிய கண்டனம்தான் இதற்கு நெய் ஊற்றி தீயாக வளர்த்தது.

முதலில் திரிஷா கண்டனம் தெரிவித்ததை அடுத்து இயக்குநர்கள் கார்த்திக் சுப்புராஜ், லோகேஷ் கனகராஜ், குஷ்பு, கஸ்தூரி, தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி என இந்த பட்டியல் நீண்டது. ஆளாளுக்கு மன்சூர் அலிகானை சகட்டு மேனிக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கைகளை தங்களது சமூக வலைதள பக்கங்களில் பதிவு செய்தனர்.

ஆனால் இந்த விவகாரத்தில், நடிகர், இயக்குநர் மற்றும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளருமான சீமான் மட்டுமே, மன்சூர் அலிகான் அப்படிப்பட்ட தவறான நோக்கத்தில் பேசுபவர் அல்ல. அவர் நல்ல பண்பான மனிதர். பெண்களை மதிக்க கூடியவர் என்று அவருக்கு ஆதரவாக பேசி இருந்தார்.

இதற்கிடையே, இந்த விஷயத்தில் பயங்கரமாக டென்சன் ஆன குஷ்பு, அவர் தேசிய மகளிர் ஆணையத்தில் உறுப்பினராக உள்ளதாக, அந்த ஆணையத்தில் புகார் சொல்லி, மன்சூர் அலிகான் மீது நுங்கம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசில் இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யவும் நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஒரு கட்டத்தில் திரிஷாவிடம் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்ட நிலையில், தவறு செய்வது மனித இயல்பு, மன்னிப்பதுதான் தெய்வகுணம் என்று கூறி, திரிஷாவும் இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார். ஆனாலும் இந்த விஷயத்தில் மன்சூர் அலிகானை திரிஷாவும், குஷ்புவும், தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியும் மிக கடுமையான வார்த்தைகளில் விமர்சித்து தங்களது கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.

இதையடுத்து திரிஷா, குஷ்பு மற்றும் சிரஞ்சீவி ஆகிய 3 பேர் மீதும் மான நஷ்ட ஈடு கேட்டு வழக்கு போட இருப்பதாக நடிகர் மன்சூர் அலிகான் அதிரடியாக தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் ஓய்ந்து விட்டது, விசித்ரா பிரச்னை சூடுபிடித்து விட்டது என்ற நினைத்த நிலையில், மீண்டும் மன்சூர் அலிகான் இந்த பிரச்னையை கையில் எடுத்திருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சற்று முன்