- Advertisement -
Homeபொழுதுபோக்குலோகேஷ் கனகராஜ் படத்தில் இருந்து திடீரென விலகிய நயன்தாரா... அட என்னங்க ஆச்சு, நம்ம லேடி...

லோகேஷ் கனகராஜ் படத்தில் இருந்து திடீரென விலகிய நயன்தாரா… அட என்னங்க ஆச்சு, நம்ம லேடி சூப்பர் ஸ்டாருக்கு…

- Advertisement -

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என நான்கே நான்கு திரைப்படங்கள் மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். ஆரம்பத்தில் வங்கியில் ஊழியராக பணியாற்றி வந்த அவர், சினிமா மீதுள்ள ஆர்வத்தால் சென்னைக்கு கிளம்பி வர குறும்படங்களை எடுத்து அடுத்த கட்டத்திற்கு சென்றார்.

இதன் மூலம் மாநகரம் படம் இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. ஒரே இரவில் வெவ்வேறு நபர்களின் வாழ்வில் நடக்கும் நிகழ்வை, விறுவிறுப்பான திரைக்கதையுடன் காட்சிப்படுத்தி வெற்றி கண்டார் லோகேஷ். அடுத்ததாக கார்த்தியுடன் இணைந்து அவர் எடுத்த கைதி திரைப்படமும், ஒரே இரவில் நடப்பது போன்றுதான் காட்சி அமைக்கப்பட்டது.

- Advertisement -

இந்தத் திரைப்படமும் சூப்பர் ஹிட் அடிக்க, தளபதி விஜய் உடன் சேர்ந்து மாஸ்டர் படத்தை கொடுத்து பிரம்மாண்ட வெற்றி கண்டார் லோகேஷ். பிறகு கமல்ஹாசனுடன் அவர்கள் இணைந்து எடுத்த விக்ரம் திரைப்படமும், எல் சி யு என்னும் கான்செப்ட்டால் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் பெற்றது.

தற்போது அவர் தளபதி விஜய்யை வைத்து லியோ படத்தை எடுத்து முடித்திருக்கிறார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வரும் 19ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாகிறது. இதன் பிறகு சூப்பர் ஸ்டாருடன் அவர் இணைய உள்ளார். இயக்கத்தில் மட்டுமில்லாமல் தயாரிப்பு, நடிப்பிலும் ஆர்வம் காட்டி வருகிறார் லோகேஷ் கனகராஜ்.

- Advertisement -

சண்டை பயிற்சியாளர்கள் அன்பறிவ் இயக்கும் புதிய படத்தில் லோகேஷ், அனிருத் ஆகியோர் கதாநாயகர்களாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுபோக தனது நண்பரும், இயக்குனருமான ரத்தினகுமார் திரைப்படத்தையும் லோகேஷ் கனகராஜ் தயாரிக்கிறார். மேயாத மான், ஆடை, குளு குளு படங்களை இயக்கிய ரத்னகுமார், மாஸ்டர் மற்றும் லியோ படத்தின் திரைக்கதையில் கவனம் செலுத்தினார்.

இந்த நிலையில் அவர் அடுத்ததாக ஹாரர் படத்தை கையில் எடுத்திருந்தார். இதில் ராகவாலாரன்ஸ் மற்றும் நயன்தாரா ஆகியோர் நடிப்பதாகவும், லோகேஷ் கனகராஜ் இதற்கு திரைக்கதை அமைப்பதாகவும் இருந்தது. ஆனால் திடீரென படத்தில் இருந்து நயன்தாரா விலகி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான காரணம் இன்னும் வெளிவராத நிலையில், கதையை மாற்றி அமைக்கும் பணியில் ரத்னகுமார் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்