- Advertisement -
Homeபொழுதுபோக்குமீண்டும் கதாநாயகனா, திரைப்பட இயக்குனரா? எந்த வழியில் பயணிப்பது? - பிளாக் பஸ்டர் படம் தந்தும்...

மீண்டும் கதாநாயகனா, திரைப்பட இயக்குனரா? எந்த வழியில் பயணிப்பது? – பிளாக் பஸ்டர் படம் தந்தும் தடுமாறும் நடிகர் ஆர்ஜே பாலாஜி!

- Advertisement -

நடிகர் சூர்யாவுக்கு கருப்பு படம் மிகப்பெரிய ஒரு வெற்றியை தந்தது. அதைத்தொடர்ந்து சூர்யா நடிப்பில் வெளியான விஸ்வநாத் அண்ட் சன்ஸ் என்ற படமும் பெரிய வெற்றியை கொடுத்திருக்கிறது. இப்போது மலையாள இயக்குனர் ஜீத்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சீன் என்ற படமும் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது.

கருப்பு விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படங்களை போலவே இந்த படமும் பெரிய வெற்றியைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் 2013ம் ஆண்டில் வெளியான சிங்கம் 2 படத்துக்கு பிறகு 12 ஆண்டுகளுக்கு மேலாக நடிகர் சூர்யாவுக்கு வெற்றி படம் எதுவுமே இல்லை. ஓடிடியில் நேரடியாக வெளியான ஜெய்பீம் சூரரைப்போற்று என்ற 2 படங்கள் மட்டுமே வணிகரீதியாக வெற்றியை பெற்றன.

- Advertisement -

இந்த நிலையில் தியேட்டரில் நேரடியாக வெளியான 10க்கும் மேற்பட்ட சூர்யாவின் படங்கள் படுதோல்வியை சந்தித்தன. அதிலும் குறிப்பாக பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட கங்குவா தானா சேர்ந்த கூட்டம் காப்பான் அஞ்சான் என்ஜிகே எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட படங்கள் மிக மோசமான தோல்வியை தழுவின.

ஆனால் கருப்பு படம் நடிகர் சூர்யாவுக்கு சூப்பர் கம்பேக் கொடுத்தது. அந்தப் படத்தை இயக்கி முக்கிய கேரக்டரில் நடித்தவர் ஆர்ஜே பாலாஜி. கருப்பு படத்தை பொருத்தவரை படம் முழுக்க வந்தவர் ஆர்ஜே பாலாஜி தான். சூர்யாவுக்கு அந்த படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு மிகக் குறைவாக இருந்தாலும் அவர் ஏற்று நடித்த கருப்பு சாமி கேரக்டரும் அவர் வந்த சில காட்சிகளும் பெரிய அளவில் அந்த படத்தை வெற்றி பெற செய்துவிட்டது.

- Advertisement -

இந்த நிலையில் கருப்பு படத்திற்கு பிறகு ஆர்ஜே பாலாஜிக்கு அடுத்த படம் இயக்குவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. எந்த தயாரிப்பாளரும் அவர் இயக்கத்தில் படம் தயாரிக்க முன்வரவில்லை. ஏனென்றால் நடிகர் ஆர் ஜே பாலாஜி டைரக்டராகும் போது தயாரிப்பாளர்களுக்கு பல விதங்களில் நெருக்கடிகள் தருவதாக ஒரு குற்றச்சாட்டு கோலிவுட்டில் இருந்து வருகிறது. அதனால் கருப்பு படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்ற பிறகும் ஆர்ஜே பாலாஜிக்கு படம் இயக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்த சூழ்நிலையில் ஏற்கனவே வீட்ல விசேஷம் மூக்குத்தி அம்மன் சிங்கப்பூர் சலூன் சொர்க்கவாசல் போன்ற படங்களில் நடித்துள்ள ஆர்ஜே பாலாஜி மீண்டும் நடிப்புக்கு திரும்பலாமா என்று யோசித்திருக்கிறார். ஆனால் அவர் ஹீரோவாக நடித்த படங்கள் சிங்கப்பூர் சலூன் சொர்க்கவாசல் படுதோல்வியை சந்தித்த நிலையில் மீண்டும் இயக்குனர் என்ற முடிவுக்கு அவர் வந்திருக்கிறார். அதனால் ஒரு புதிய படத்தை விரைவில் டைரக்ட் செய்ய உள்ளதாக லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்