- Advertisement -
Homeபொழுதுபோக்குஉலக அழகி நடிகை ஐஸ்வர்யா ராயை தாக்கினாரா பாலிவுட் நடிகர் சல்மான்கான்? என்ன கொடும சார்...

உலக அழகி நடிகை ஐஸ்வர்யா ராயை தாக்கினாரா பாலிவுட் நடிகர் சல்மான்கான்? என்ன கொடும சார் இது என்று புலம்பும் ரசிகர்கள்!

- Advertisement -

பல ஆண்டுகளாக பல நடிகைகள் மாடல் அழகிகள் பிரபலங்கள் உலக அழகி பட்டம் பெற்றாலும் 30 ஆண்டுகளாக உலக அழகி என்றால் ரசிகர்களை பொருத்த வரை அவர் ஐஸ்வர்யா ராயாக மட்டும்தான் இருக்கிறார். ஏனென்றால் உலக அழகி பட்டம் பெற்றவர்களில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக இன்றும் வலம்வந்து கொண்டிருக்கிறார்.

தமிழில் ஜீன்ஸ் எந்திரன் இராவணன் பொன்னியின் செல்வன் 1 பொன்னியின் செல்வன் 2 கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் இருவர் உள்ளிட்ட பல படங்களில் ஐஸ்வர்யா ராய் நடித்திருக்கிறார். அதே போல் இந்தியிலும் முன்னணி நடிகையாக 1990களில் ஐஸ்வர்யா ராய் வலம் வந்தார்.

- Advertisement -

அப்போது பாலிவுட் நடிகர் சல்மான்கான் ஐஸ்வர்யா ராய் இருவரும் இணைந்து பல படங்களில் நடித்தனர். அப்போது இருவருக்கும் இடையில் காதல் ஏற்பட்டது. இது ரசிகர்கள் மத்தியில் தெரிந்து பரபரப்பை ஏற்படுத்தியது. 1999ம் ஆண்டு முதல் 2002ம் ஆண்டு வரை இருவரும் திருமணம் செய்துக்கொள்ளும் அளவுக்கு நெருக்கமாக இருந்த நிலையில் ஒரு கட்டத்தில் பிரிந்து விட்டனர்.

இந்நிலையில் 2002ம் ஆண்டில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகை ஐஸ்வர்யா ராய், நடிகர் சல்மான்கானுக்கும் தனக்கும் இருந்த காதல் முறிந்து விட்டதாக பகிரங்கமாக அறிவித்தார். சல்மான் கான் தன்னை மிகவும் சந்தேகப்படுவதாகவும் மற்ற பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான் அபிஷேக் பச்சன் ஆகியோருடன் தன்னை இணைத்து பேசி வருவதாகவும் கூறி வருத்தப்பட்டார்.

- Advertisement -

மேலும் நடிகர் சல்மான் குறித்து ஐஸ்வர்யா ராய் ரசிகர்கள் அதிர்ச்சியாகும் விதமான ஒரு முக்கிய தகவலையும் பகிரங்கமாக தெரிவித்தார். நடிகர் சல்மான்கான் பலமுறை தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும் ஆனால் உடல் ரீதியாக வெளியே எதுவும் காயங்கள் தெரியவில்லை என்றும் அதனால் நான் எந்த விஷயமும் நடக்காதது போல படப்பிடிப்பில் கலந்துக்கொண்டேன் என்றும் கூறியிருக்கிறார்.

நடிகர் சல்மான்கான் நடிகை ஐஸ்வர்யா ராயை தாக்கிய சம்பவம் அப்போது பெரிய சர்ச்சையாக வெடித்த நிலையில் பிறகு அமிதாப் பச்சன் மகன் அபிஷேக் பச்சனை நடிகை ஐஸ்வர்யா ராய் காதலித்து 2007ம் ஆண்டில் திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு ஆராதனா என்ற மகள் இருக்கிறார். நடிகர் சல்மான் கான் உலக அழகி நடிகை ஐஸ்வர்யா ராயை தாக்கிய சம்பவம் குறித்த அறிந்த இந்திய சினிமா ரசிகர்கள் என்ன கொடும சார் என்று இப்போதும் புலம்புகின்றனர்.

- Advertisement -

சற்று முன்