- Advertisement -
Homeபொழுதுபோக்குநீக் படத்தின் விழாவில் இப்படி ஒரு சம்பவமா? முன்னணி இயக்குனர்களை விரட்டியடித்த படக்குழுவினர் - என்ன...

நீக் படத்தின் விழாவில் இப்படி ஒரு சம்பவமா? முன்னணி இயக்குனர்களை விரட்டியடித்த படக்குழுவினர் – என்ன பாஸ் இப்படி ஆகிப் போச்சு?

- Advertisement -

நடிகர் தனுஷ் நடிகராக மட்டுமின்றி பாடகர் தயாரிப்பாளர் மற்றும் திரைப்பட இயக்குனராகவும் இருக்கிறார். ப பாண்டி ராயன் படங்களை தொடர்ந்து தனுஷ் இயக்கத்தில் உருவான படம் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். இந்த படம் சுருக்கமாக நீக் என அழைக்கப்படுகிறது. வரும் 21ம் தேதி நீக் படம் ரிலீஸாக உள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் பிரமோ நிகழ்ச்சி ஒன்று சென்னையில் நடந்தது. இந்த விழாவில் நடிகர் தனுஷ் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக அவரது குடும்பம் சார்ந்த அண்ணன் செல்வராகவன் அப்பா கஸ்தூரி ராஜா உள்ளிட்ட குடும்பத்தினர் பங்கேற்றனர். ஏனெனில் நீக் படத்தில் நாயகனாக நடித்திருப்பது தனுஷின் அக்கா மகன் பவிஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த விழாவில் லப்பர் பந்து என்ற சூப்பர் ஹிட் வெற்றிப் படத்தை தந்த இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து மற்றும் போர்த் தொழில் படத்தை இயக்கிய இயக்குனர் விக்னேஷ் ராஜா இருவரும் பங்கேற்று இருந்தனர். இவர்கள் இருவரும் அடுத்து தனுஷ் நடிக்க உள்ள படங்களை இயக்க கமிட் ஆகியுள்ளனர்.

அதனால் இந்த விழாவில் அவர்களும் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றுள்ளனர். விழா மேடைக்கு முன்புறம் இருந்த முதல் வரிசையில் அவர்கள் இருவரும் அருகருகே அமர்ந்து பேசிக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது படக்குழுவை சேர்ந்த ஒருவர், மேடைக்கு முன்புறம் இருந்த ரசிகர்கள் கூட்டத்தை பால்கனிக்கு செல்லுமாறு அறிவுறுத்தி ரசிகர்களை பால்கனிக்கு செல்ல வைத்துள்ளனர்.

- Advertisement -

அப்போது முன்வரிசையில் இளைஞர்கள் போன்ற தோற்றத்தில் அமர்ந்திருந்த இயக்குனர்களான தமிழரசன் பச்சமுத்து, விக்னேஷ் ராஜா இருவரையும் ரசிகர்கள் என நினைத்து, அவர்களையும் பால்கனிக்கு போங்க, ரசிகர்கள் இங்கே அமரக் கூடாது என விரட்டியுள்ளார். அவர்கள் இருவரும் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திகைத்து போய் அப்படியே உட்கார்ந்து இருந்துள்ளனர்.

பிறகு அங்கிருந்த சிலர், இவர்கள் இருவரும் வெற்றிப் படங்களை தந்த இயக்குனர்கள் என தகவல் தெரிந்த பிறகு அவர்கள் அங்கேயே அமர வைக்கப்பட்டுள்ளனர். சூப்பர் ஹிட் படங்களை தந்தும் மக்கள் மத்தியில் அவர்கள் முகம் இன்னும் பிரபலமாகததால் இப்படி ஒரு தர்ம சங்கடத்தை தனுஷ் பட விழாவில் அவர்கள் சந்தித்து விட்டனர்.

- Advertisement -

சற்று முன்