- Advertisement -
பாலிவுட் நடிகர் சல்மான்கான் நடிகை சித்ரங்கதா சிங் நடித்த படம் மாத்ருபூமி; மே வார் ரெஸ்ட் இன் பீஸ் வரும் டிசம்பர் 4ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்தின் பிரமோசன் நிகழ்ச்சியில் பேசிய படத்தின் ஹீரோ நடிகர் சல்மான்கான் கூறியதாவது, மாத்ருபூமி படத்தின் டிரெய்லர் மிகவும் நீளமாக இருப்பதாகவும் படத்தின் முழு கதையையும் காட்டி விட்டதாகவும் சிலர் கூறுகின்றனர். ஆனால் நாங்கள் முழு படத்தையும் காட்டவில்லை. டிசம்பர் 4ம் தேதி முழு படத்தையும் உங்களுக்கு காட்டுகிறேன். ஒரு புத்தகத்தை அதன் அட்டையை வைத்து மதிப்பிடக்கூடாது என்று சொல்வார்கள். ஆனால் நீங்கள் ஏற்கனவே டிரெய்லரை பார்த்து படத்தை மதிப்பிட்டு விட்டீர்கள் என்று ஆவேசமாக பேசியிருக்கிறார்.





