- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னுடைய படத்தில் நான் அழும் காட்சிகளை பார்த்து ரசிகர்கள் அப்படி செய்கிறார்கள் - படவிழா ஒன்றில்...

என்னுடைய படத்தில் நான் அழும் காட்சிகளை பார்த்து ரசிகர்கள் அப்படி செய்கிறார்கள் – படவிழா ஒன்றில் ஆதங்கப்பட்டு பேசிய பாலிவுட் நடிகர் சல்மான்கான்!

- Advertisement -

இந்தி சினிமா உலகில் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சல்மான்கான். இந்தியா முழுவதும் பாலிவுட் ஸ்டார் நடிகர் சல்மான்கானுக்கு பல லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர். அவர் நடித்த பல படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கின்றன. குறிப்பாக ஹம் ஆஃப் ஹே ஹைகோன் என்ற படம் இந்தியால் ஆண்டுக்கணக்கில் ஓடிய ஒரு படமாகும்.

இதில் முன்னணி இந்தி நடிகையான மாதுரி தீக்சித் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படம் குடும்ப டிராமாவாக சென்டிமென்ட் கதைக்களத்தில் உருவாகி இருந்தது. இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் அனுபம்கெர் முகேஷ் உள்ளிட்டோர் நடித்திருந்தார். இந்த படத்தின் சூப்பர் ஹிட் பாடல்களை எஸ்பி பாலசுப்ரமணியம் பாடியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

கடந்த பல ஆண்டுகளாக நடிகர் சல்மான்கானுக்கு பல்வேறு கொலை மிரட்டல்களும் தீவிரவாதிகளின் அச்சுறுத்தலும் இருப்பதால் தொடர்ந்து அவர் பலத்த பாதுகாப்புக்கு நடுவே இருந்து வருகிறார். எப்போதும் 75க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் பாதுகாப்பு ஊழியர்கள் அவரைச் சுற்றி பாதுகாப்பு வளையம் அமைத்து உஷாராக கவனித்து வருகின்றனர். அவர் செல்லும் இடங்களில் எல்லாம் கடுமையான பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

சமீபத்தில் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சல்மான் கான் சிக்கந்தர் என்ற இந்தி படத்தில் நடித்திருந்தார். ஆனால் அந்த படம் பெரிய வெற்றியை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமீபத்தில் சவுதி அரேபியாவில் நடந்த ரெட் சீ சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு விருந்தினராக பாலிவுட் நடிகர் சல்மான்கான் கலந்து கொண்டார்.

- Advertisement -

அப்போது அவர் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். நிகழ்ச்சி தொகுப்பாளரின் கேள்விகளுக்கும் நடிகர் சல்மான்கான் பதில் அளித்து பேசினார். அப்போது சல்மான் கான் கூறியதாவது, நான் மிகச் சிறந்த நடிகன் என்று நினைக்கவில்லை. நான் வேறு எதைச் செய்தாலும் நீங்கள் அதை கண்டுபிடிக்கலாம். ஆனால் மிக நடிப்பதை மட்டும் கண்டுபிடிக்க முடியாது. என்னால் அது முடிவதில்லை. படப்பிடிப்பின் போது எனக்கு எப்படி உணர்வு தோன்றுகிறதோ அப்படியே செய்து விடுகிறேன். அவ்வளவு தான் என்றார்.

அப்போது நிகழ்ச்சி தொகுப்பாளர் அங்கிருந்து ரசிகர்களிடம் சல்மான் கான் சொல்வது உண்மையா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு ரசிகர்கள் இல்லை என்று மறுப்பு தெரிவித்தனர். அவர் சிறந்த நடிகர் தான் என்றும் கூறினர். அடுத்து பேசிய நடிகர் சல்மான்கான், சில படங்களில் நான் சில காட்சிகளில் அழும்போது நீங்கள் என்னை பார்த்து சிரிப்பதாக எனக்கு தோன்றுகிறது என்றார். உடனடியாக ரசிகர்கள், இல்லை நாங்களும் உங்களுடன் சேர்ந்துதான் அழுகிறோம் என்றனர். இதைக் கேட்டதும் சல்மான்கான் புன்னகை செய்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் இப்போது வேகமாக பரவி வருகிறது.

- Advertisement -

சற்று முன்