- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னுடைய பெயர் அர்ஜூன் கிடையாது, நிஜப் பெயரே வேற - பல ஆண்டுகளுக்கு பிறகு ஆக்சன்...

என்னுடைய பெயர் அர்ஜூன் கிடையாது, நிஜப் பெயரே வேற – பல ஆண்டுகளுக்கு பிறகு ஆக்சன் கிங் அர்ஜூன் போட்டுடைத்த உண்மை!

- Advertisement -

கடந்த 40 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை பெரும்பாலான குடும்பத்தில் குழந்தைகளுக்கு பெயரே வைக்க மாட்டார்கள். பாப்பா அல்லது தம்பி என பொதுவான பெயரில்தான் பெற்றோர் உறவினர் அழைப்பார்கள். பிறகு அவர்களை பள்ளியில் சேர்க்கும் போதுதான் பெயர் வைப்பது வழக்கம். அதையும் பள்ளியில் பெயர் எழுதி சேர்க்கும் அந்த ஆசிரியரே இனிமேல் இதுதான் உன் பெயர் என்று சொல்லி ஏதாவது ஒரு பெயரை வைத்து விடுவார்.

தமிழ் சினிமாவிலும் கே பாலசந்தர் பாரதிராஜா போன்ற சில இயக்குனர்கள் நடிகர் நடிகைகளுக்கு உண்மையான அவர்களது பெயர்களை மாற்றி அட்ராக்டிவ் ஆன புதிய பெயர்களை வைத்து விடுவார்கள். ஏனென்றால் அவர்களது பெயர்கள் எளிதில் ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்க வேண்டும் என்பதால்தான். அப்படி தான் பல நடிகர் நடிகைகள் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது.

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் இயற்பெயர் சிவாஜி ராவ். சூர்யாவின் இயற்பெயர் சரவணன். நயன்தாராவின் உண்மையான பெயர் டயானா மரியம் குரியன். சத்யராஜ் பெயர் ரங்கராஜ். விஜயகாந்த் பெயர் விஜயராஜ், அதற்கு முன்பு அவருக்கு பெற்றோர் வைத்த பெயர் நாராயணன். அதே போல் ராதா அம்பிகா ரேகா ரேவதி போன்றவ நடிகைகளின் இயற்பெயர்களும் வெவ்வேறுதான்.

திரைப்படங்களில் நடிக்கும் போது அவர்களது பெயர் மாடலாகவும் ரசிகர்கள் விரும்பும்படியும் மாற்றப்பட்டு விடுகின்றன. அதே போல் ஆக்சன் கிங் அர்ஜூன் என அழைக்கப்படும் நடிகர் அர்ஜூனின் நிஜப்பெயர் அதுவல்ல. பல ஆண்டுகளுக்கு பிறகு அந்த ரகசியத்தை அவரே வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் அர்ஜூன் கூறியதாவது, என்னோட உண்மையான பெயர் அர்ஜூன் கிடையாது. என்னோட உண்மையான பெயர் ஸ்ரீனிவாஸ். ஸ்கூல் காலேஜ்ல அசோக்குன்னு எல்லாரும் கூப்பிடுவாங்க. என்னோட நண்பர்கள் எல்லாரும் அசோக்ன்னு தான் கூப்பிடுவாங்க. வீட்டுல சீனு என்று கூப்பிடுவாங்க.

என்னோட முதல் படத்துல என்னுடைய கேரக்டர் பேர் அர்ஜூன். இந்த பேர் உங்களுக்கு நல்லா சூட் ஆகுது. இந்த பேரே வெச்சுக்கோங்கன்னு டைரக்டர் சொன்னார். ஆரம்பத்துல அர்ஜூன்னு யாராவது சொன்னால் வேற யாரையோ கூப்பிடறாங்கன்னு நினைச்சுப்பேன். அப்புறமா தான் அது என் பெயர் என்று பழகிப் போயிடுச்சு என்று நடிகர் அர்ஜூன் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்