- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினி பட நாயகிக்காக சுதா கொங்காரா படத்தையே புறக்கணித்த நடிகர் சூர்யா - இப்படி குடும்ப...

ரஜினி பட நாயகிக்காக சுதா கொங்காரா படத்தையே புறக்கணித்த நடிகர் சூர்யா – இப்படி குடும்ப அரசியலில் சிக்கிக் கொண்டாரே என புலம்பும் ரசிகர்கள்

- Advertisement -

தமிழ் சினிமாவில் சில இயக்குனர்கள் படங்களில் நடிக்க நடிகர், நடிகையர் ஆர்வம் காட்டுகின்றனர். அதற்கு காரணம் அவர்களது படங்களின் நடிக்கும் போது தங்களது தனி நடிப்பு திறமை வெளிப்படும். மேலும் அவர்களது படங்களில் நடிப்பதே தங்களுக்கு ஒரு பெரிய வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றுத் தரும் என்பது மற்றொரு முக்கிய காரணமாக இருக்கிறது.

இயக்குனர்கள் மணிரத்னம், பாரதிராஜா, மகேந்திரன், பாலுமகேந்திரா, கே பாலசந்தர், பாலா, வெற்றிமாறன், அமீர் போன்ற இயக்குனர்கள் அந்த முன்னணி வரிசையில் இருக்கின்றனர். அதே போல் இறுதிச்சுற்று, சூரரைப் போற்று போன்ற முக்கிய படங்களை தந்த சுதா கொங்காரா படங்களில் நடிக்கவும் முன்னணி நடிகர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

அந்த வகையில் நடிகர்கள் விக்ரம், சிவகார்த்திகேயன் ஆகியோர் சுதா கொங்காராவை சந்தித்து பேசியுள்ளனர். தங்களுக்கான ஒரு கதையை உருவாக்குமாறு அவரிடம் கேட்டுக்கொண்டுள்ளனர். அந்த வகையில் விக்ரம் அல்லது சிவகார்த்திகேயன் இருவரில் யாரேனும் ஒருவர் அடுத்து சுதா கொங்காரா இயக்கும் படத்தில் விரைவில் நடிக்க உள்ளார். அதற்கான அறிவிப்பு வெளியாக இருக்கிறது.

ஆனால் சூர்யாவுக்கு சூரரைப் போற்று என்ற வெற்றிப் படத்தை தந்த சுதா கொங்காரா அடுத்து, சூர்யா நடிப்பில் புறநானூறு என்ற படத்தை இயக்க ஆயத்தமானார். படத்தின் டைட்டில் அறிவிப்பு விழாவும் சில மாதங்களுக்கு முன் நடந்தது. ஆனால் ஒரு கட்டத்தில் படத்தின் கதையில் நிறைய மாற்றங்களை, திருத்தங்களை சூர்யா சொன்னதால், அந்த படமே டிராப் ஆகி நின்று விட்டது. பலகட்ட பேச்சு வார்த்தை நடத்தியும் புறநானூறு படத்தை துவங்கும் அறிகுறியே இல்லை.

இந்நிலையில் புறநானூறு படம் சூர்யா நடிக்காமல், படத்தின் டைட்டில் அறிவிப்போடு நின்றுபோக காரணம் என்னவென்று தெரிய வந்துள்ளது. அதாவது பாட்ஷா பட நாயகி நக்மாவுக்காக தான் இந்த படத்தையே சூர்யா புறக்கணித்துள்ளார். சூர்யாவின் மனைவி ஜோதிகாவின் அக்கா தான் நக்மா தான் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் கடந்த பல ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில், மகளிர் அணியில் முக்கிய பொறுப்பில் இருந்து வருகிறார்.

சுதா கொங்காரா இயக்கும் புறநானூறு படம், இந்தி எதிர்ப்பு போராட்டத்தை அடிப்படையாக கொண்டது. உண்மையில் நடந்த சில சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்படுகிறது. இதில் காங்கிரஸ் கட்சியின் பெயரும் அடிபடுகிறது என்பதால், சூர்யா இந்த படத்தில் நடிக்க வேண்டாம் என நக்மாவே கூறியிருப்பதாக தெரிகிறது, மேலும் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் காங்கிரஸ்க்கு சாதகமாக வரும் பட்சத்தில், இந்த படத்தால் பாதிப்பு வருமோ என்ற அச்சத்தாலும் இந்த படத்தில் சூர்யா நடிக்காமல் ஒதுங்கிக் கொண்டதாகவும் தெரிய வந்துள்ளது.

சற்று முன்