- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்… இயக்குனர் நடிகர் சமுத்திரக்கனி சொன்ன தகவல் - என்ன...

நான் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்… இயக்குனர் நடிகர் சமுத்திரக்கனி சொன்ன தகவல் – என்ன ப்ரோ… இது பெரிய சம்பவமா இருக்குதே?

- Advertisement -

ஒரு நல்ல புத்தகம், ஒரு நல்ல திரைப்படம் ஒரு நல்ல படைப்பு தனக்கான வெற்றியை அதுவே தேடிக்கொள்ளும் என்று ஒரு பொன்மொழி இருக்கிறது. அதாவது ஒரு வெற்றிக்கு தகுதியான படைப்பு என்பது அதுவாகவே அதன் வெற்றியை தேடிக்கொள்ளும். அந்த வெற்றியை யாரும் அதற்கு தேடித் தர வேண்டியது இல்லை. யாரும் அவர்களை அடையாளம் காட்ட வேண்டியதில்லை. அவர்களாகவே வெளிச்சத்துக்கு வந்துவிடுகின்றனர்.

அப்படி ஒரு சிறந்த திரைக்கலைஞனாக நடிகர் மற்றும் இயக்குனர் சமுத்திரக்கனியை குறிப்பிட்டுச் சொல்லலாம். ஆரம்பத்தில் இயக்குனர் அமீரிடம் உதவி இயக்குனராக இருந்தவர். பிறகு சசிக்குமார் இயக்கிய சுப்ரமணியபுரம் படத்தில் வில்லனாக நடித்தார். பிறகு சமுத்திரக்கனி இயக்கிய நாடோடிகள் படத்தில் சசிக்குமார் நாயகனாக நடித்தார்.

- Advertisement -

சுப்ரமணியபுரம் நாடோடிகள் இரண்டுமே மிகப்பெரிய வெற்றிப் படங்களாக இருந்தன. தொடர்ந்து இயக்குனராக நடிகராக தயாரிப்பாளராக தமிழ் சினிமாவில் வலம் வரும் சமுத்திரக்கனி தமிழ் தெலுங்கு மலையாளம் என பல மொழிகளில் பிஸியாக நடிக்கிறார். சமீபத்தில் அவரது நடிப்பில் நந்தா பெரியசாமி இயக்கிய திரு மாணிக்கம் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

சினிமாவில் நடிகராக இயக்குனராக வருவதற்கு முன்பு, சமுத்திரக்கனி இயக்குனர் கே பாலசந்தரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். அவர் இயக்கிய டிவி சீரியல்கள், அவர் தயாரித்த டிவி சீரியல்களில் சமுத்திரக்கனி பல ஆண்டுகள் பணி செய்திருக்கிறார். இது தமிழ் சினிமா ரசிகர்களில் பலருக்கும் தெரியாதது.

- Advertisement -

இதுகுறித்து சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் இயக்குனர் மற்றும் நடிகர் சமுத்திரக்கனி கூறியதாவது, நான் இதுவரை 3 ஆயிரம் எபிசோடு டைரக்ட் செய்திருக்கிறேன். அண்ணி மெகா சீரியல்தான் முதன் முதலாக நான் இயக்கியது. அது 350 எபிசோடு ஓடியது. அது முடிந்த பிறகு சஹானா சீரியல். நான் நடிக்க வந்துவிட்டாலும், அதில் நிறைய பகுதிகளை நான் ஷூட் செய்தேன்.

அதன்பிறகு செல்வி அரசி தங்க வேட்டை அலைபாயுதே தேன்மொழி என மொத்தம் 3 ஆயிரம் எபிசோடுக்கு மேல் டைரக்ட் செய்திருக்கிறேன், என்று அந்த நேர்காணலில் சமுத்திரக்கனி கூறியிருக்கிறார். ராஜ் டிவியில் ஔிபரப்பான ரமணி வெர்சஸ் ரமணி என்ற காமெடி தொடரில் ராம்ஜி தேவதர்ஷினி தம்பதியாக நடித்திருந்தனர். இதில் சில காட்சிகளில் சமுத்திரக்கனியும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்