- Advertisement -
Homeபொழுதுபோக்குவேண்டாத வேலை பார்த்து வம்பில் மாட்டிக்கொண்ட நடிகர் சந்தானம், நடிக்கிற வேலைய மட்டும் பாருங்க -...

வேண்டாத வேலை பார்த்து வம்பில் மாட்டிக்கொண்ட நடிகர் சந்தானம், நடிக்கிற வேலைய மட்டும் பாருங்க – இதெல்லாம் தேவையான பாஸ்?

- Advertisement -

நடிகர் சந்தானம், விஜய் டிவியில் காமெடி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமாகி, அந்த பிரபலத்தின் மூலம் சினிமாவுக்குள் வந்தவர். பிறரை கிண்டலடிப்பது, நையாண்டி செய்வதுதான் இவரது காமெடி பாணி. ஆரம்பத்தில் இவரது காமெடியை ரசிகர்கள் வெகுவாக ரசித்தனர்.

ஆனால் ஒரு கட்டத்துக்கு பிறகு, நடிகர் கவுண்டமணி பாணியில் இவரது பிறரை விமர்சிப்பதே இவரது காமெடியாக இருந்ததால், ரசிகர்களுக்கு சலித்துப்போனது. அதே நேரத்தில் சூரி, யோகிபாபு காமெடி காட்சிகள் மாறுபட்டு இருந்ததால், அவர்கள் பக்கம் ரசிகர்களின் கவனம் திரும்பியது.

- Advertisement -

இந்த சூழலில் சந்தானம் காமெடி டிராக்கில் இருந்து மாறி, ஹீரோவாக நடித்தார். அந்த படங்களும் ரசிக்கும்படி இருந்ததால் ஹீரோவாக சந்தானம் வெற்றி பெற்றார். தொடர்ந்து அறை எண் 305ல் கடவுள், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், தில்லுக்கு துட்டு, கண்ணா லட்டு தின்ன ஆசையா, ஏ1, சக்கப்போடு போடு ராஜா, டகால்டி, பாரிஸ் ஜெயராஜ், டிடி ரிடர்ன்ஸ் போன்ற பல படங்களில் சந்தானம் நடித்தார். இதில் சில படங்கள் நல்ல வெற்றியை பெற்றன.

ஆனால் சமீபமாக அவர் நடித்த குலுகுலு, கிக், ஏஜண்ட் கண்ணாயிரம், சபாபதி போன்ற படங்கள் பிளாப் படங்களாக அமைந்துவிட்டன. இது அவரது சினிமா பயணத்தில் மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. இந்த சூழலில் வடக்குப்பட்டி ராமசாமி என்ற படத்தில் நடிக்கிறார் சந்தானம். இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பி உள்ளது.

- Advertisement -

அதாவது பொங்கல் பூஜைக்கான ஏற்பாடுகளை செய்தபடி பட்டுவேட்டி சட்டையில் இருக்கும் சந்தானத்திடம், ஏண்டா டேய், சாமி இல்லேன்னு சொல்லிக்கிட்டு ஊருக்குள்ள சுத்திக்கிட்டு திரிஞ்சியே, அந்த ராமசாமி தானே நீ என ஒருவர் கேட்க, நான் அந்த ராமசாமி இல்லே என சந்தானம் பதில் சொல்வதோடு போன்று, ஹேப்பி பொங்கல் என்று அந்த வீடியோ உள்ளது.

இது தந்தை பெரியாரை கொச்சைப்படுத்தும் வகையில் இருப்பதாக சர்ச்சை எழுந்தது. இதை அடுத்து, பலரும் கடுமையாக விமர்ச்சித்தனர். விஷயம் விவகாரமானதை அடுத்து, அந்த பதிவை நீக்கி விட்டார் சந்தானம். ஏற்கனவே படங்கள் சரிவர ஓடாமல், மார்க்கெட் பறிபோயிருக்கும் நேரத்தில் படத்தின் பிரமோவுக்காக இந்த வேலை எல்லாம் சந்தானம் பார்க்கலாமா, என பலரும் அவரை கலாய்த்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்