- Advertisement -
Homeபொழுதுபோக்குசெயின் பறிப்பு செல்போன் திருட்டு வழக்கு - நடிகர் சந்தானத்தை தேடி வீட்டுக்கு வந்த போலீஸ்...

செயின் பறிப்பு செல்போன் திருட்டு வழக்கு – நடிகர் சந்தானத்தை தேடி வீட்டுக்கு வந்த போலீஸ் – அவரே பகிர்ந்த உண்மை சம்பவம்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் காமெடி நடிப்பில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் நடிகர் சந்தானம். துவக்கத்தில் மன்மதன் வல்லவன் படங்களில் அவரை காமெடி ரோலில் அறிமுகப்படுத்தியவர் நடிகர் சிலம்பரசன்தான். பிறகு சந்தானம் பேசிய பஞ்ச் டயலாக் காமெடி பெரிய அளவில் படங்களில் கிளிக் ஆகி ரசிகர்களிடம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது.

துவக்கத்தில் காமெடி ரோலில் நடித்த சந்தானம் பிறகு உதயநிதி ஸ்டாலின் ஆர்யா விஷால் ஜீவா போன்றவர்களின் படங்களில் ஹீரோவுக்கு சமமான காமெடி ரோல்களில் நடித்தார். படத்தில் ஏறக்குறைய இரட்டை நாயகர்களில் ஒருவராக சந்தானம் கேரக்டர் இருந்தது. அதன்பிறகு சந்தானம் ஹீரோவாகவும் நடிக்க துவங்கி வெற்றி பெற்றார்.

- Advertisement -

நடிகர் சந்தானம் காமெடி ரோலில் நடித்த சில படங்களில் திருடன் கேரக்டரில் நடித்திருந்தார். குறிப்பாக நடிகர் கார்த்தியுடன் அவர் நடித்த சிறுத்தை படத்தில் காட்டுப்பூச்சி என்ற கேரக்டரில் திருடனாக நடித்திருப்பார். அதே போல் நான் ஈ படத்திலும் வேலாயுதம் படத்திலும் சந்தானம் திருடனாக தான் நடித்திருந்தார்.

இதுகுறித்து விழா ஒன்றில் பங்கேற்ற நடிகர் சந்தானம் பேசியதாவது, சிறுத்தை படத்தில் திருடன் கேரக்டரில் கார்த்தியுடன் நடித்திருப்பேன். ரெண்டு பேரும் நிறைய இடங்களில் திருடுவது போல் படத்தில் காட்சிகள் இருந்தன. அதனால் திருடன் ஒருவனிடம் பழகி அவனது கேரக்டர் பாடி லாங்வேஜ் நடவடிக்கை எல்லாம் எப்படி இருக்கிறது என தெரிந்துக்கொள்ள ஆசைப்பட்டேன்.

- Advertisement -

அதற்காக எங்க ஏரியாவில் ஒரு ஆளை தேடிப் பிடித்தேன். அவனுடன் ரெண்டு மூன்று நாட்கள் இருந்து பழகினேன். அப்புறம் எங்க வீட்டுக்கு என்னை தேடி போலீஸ் வந்துவிட்டது. அவன் எங்கேயோ செயின் அறுத்துட்டு மொபைல் போன்கள் எல்லாம் திருடீட்டு போலீசில் சிக்கி இருக்கிறான். போலீஸ் விசாரித்த போது நடிகர் சந்தானத்துடன்தான் 2 நாட்களாக இருந்தேன் என்று சொல்லி விட்டான்.

அதனால் போலீஸ் என்னை தேடி வீட்டுக்கு வந்து விட்டது. அப்போது என் அப்பா என்னடா, மொபைல் போன் எல்லாம் திருடுறியா, உன்னை பிடிக்க போலீஸ் வந்திருக்குது என்றார். அப்புறம் போலீஸ் கிட்ட பஞ்சாயத்து பேசி ஒருவழியா அதெல்லாம் முடிஞ்சது, அவன் பேருதான் காட்டுப்பூச்சி. அதுதான் சிறுத்தை படத்தில் என் கேரக்டர் பெயரா இருந்தது என்று அந்த விழாவில் நடிகர் சந்தானம் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்