- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னை சங்கி என்று அதனால்தான் சொல்கிறார்களா? வடக்குப்பட்டி ராமசாமி பட வெற்றி விழாவில் பதிலடி தந்த...

என்னை சங்கி என்று அதனால்தான் சொல்கிறார்களா? வடக்குப்பட்டி ராமசாமி பட வெற்றி விழாவில் பதிலடி தந்த நடிகர் சந்தானம்

- Advertisement -

நடிகர் சந்தானம் விஜய் டிவியில் காமெடி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர். பிறகு சினிமாவில் நடித்து காமெடி நடிப்பில் ரசிகர்களின் மனம் கவர்ந்தார். ஒரு கட்டத்தில் காமெடி நாயகனாக மாறிய அவர், பல படங்களில் நடித்து முக்கிய ஹீரோ நடிகர்களில் ஒருவராக மாறினார். சந்தானம் படங்களுக்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது.

நடிகர் சந்தானம் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் வடக்குப்பட்டி ராமசாமி. கடவுள் இல்லைன்னு ஊருக்கு சொல்லிட்டு திரிவானே. அந்த ராமசாமிதான நீ என்று இந்த படத்தின் டிரெயிலரை வெளியிட்டதால் அது, பயங்கர பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து பலரும் கடுமையாக விமர்சித்தனர்.

- Advertisement -

சரியான பட வாய்ப்புகள் இல்லாமல், பல படங்கள் தோல்வியடைந்த நிலையில் கம்பேக் தர வேண்டிய படம் இது. இந்த நேரத்தில் இப்படிபட்ட வசனம் சந்தானத்துக்கு தேவையா என பலரும் கேள்வி எழுப்பினர். எனினும் இந்த வசனம் படம் குறித்த பெரிய சர்ச்சையை ஏற்படுத்தினாலும், இது படத்துக்கு நல்ல விளம்பரமாகவும் அமைந்து, படம் ரிலீசான பிறகு நல்ல வசூலை கொடுத்தது.

நேற்று வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றி விழா நடந்தது. இதில் பேசிய நடிகர் சந்தானம், இந்த படத்தில் பெரியார் பெயரை எந்த இடத்திலும் நாங்கள் குறிப்பிடவில்லை. வடக்குப்பட்டி ராமசாமி என்பது கவுண்டமணி பேசும் ஒரு டயலாக். அதைத்தான் இந்த படத்துக்கு டைரக்டர் டைட்டிலாக வைத்திருக்கிறார்.

- Advertisement -

இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், கடவுளை வைத்து காசு பண்றது ரொம்ப தப்பு. அதே மாதிரி கடவுள் பெயரை வைத்து அரசியல் செய்வதும், பிரச்னை பண்றதும் தப்பு என்றுதான் இந்த படத்தில் சொல்லி இருக்கிறாம். மற்றபடி நீங்கள் நினைத்த மாதிரி தப்பான விஷயங்களை நாங்கள் படத்தில் சொல்லவில்லை என்பது படத்தை பார்த்தவர்களுக்கு புரிந்திருக்கும்.

என்னை சங்கி என சிலர் விமர்சிக்கின்றனர். நான் 6வது படித்த போது சங்கீதா என்ற பெண்ணை காதலித்தேன். அந்த பெண்ணை சங்கி சங்கி என்றுதான் அழைப்பேன். அதனால் அவர் சங்கி ஆகி விடுவாரா, என பதிலடி தந்துள்ளார் சந்தானம். அதாவது கடவுள் மறுப்பாளராக அவர் டிரெய்லரில் பேசிய டயலாக்கை வைத்து சொன்னதற்கு இந்த விழாவில் பதில் சொல்லி இருக்கிறார் நடிகர் சந்தானம்.

- Advertisement -

சற்று முன்