- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த படம் ரிலீஸ் என்றபோது சின்னதா ஒரு பயம் வந்தது, ஆனா அவரது வாக்கு பலித்து...

அந்த படம் ரிலீஸ் என்றபோது சின்னதா ஒரு பயம் வந்தது, ஆனா அவரது வாக்கு பலித்து விட்டது – வெளிப்படையாக பேசிய நடிகர் சந்தானம்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் காமெடி நடிப்பில் ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் சந்தானம். ஆரம்பத்தில் மன்மதன் வல்லவன் ஒஸ்தி சச்சின் போன்ற படங்களில் காமெடி செய்தவர் பிறகு ஜீவா ஆர்யா விஷால் உதயநிதி ஸ்டாலின் நடித்த படங்களில் அவர்களுடன் படம் முழுக்க வந்து காமெடி செய்தார். ஏறக்குறைய இரட்டை கதாநாயகர்களில் ஒருவராக சந்தானம் அந்த படங்களில் இருந்தார்.

குறிப்பாக ஒரு கல் ஒரு கண்ணாடி நண்பேன்டா சிவா மனசுல சக்தி பாஸ் என்கிற பாஸ்கரன் வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க சிங்கம் புலி போன்ற பல படங்களில் சந்தானம் ஹீரோக்களுக்கு இணையாக கேரக்டர்களில் படம் முழுவதும் வந்து காமெடி செய்து ரசிகர்களின் மனம் கவர்ந்தார்.

- Advertisement -

ஒரு கட்டத்தில் காமெடி நடிப்பில் இருந்து ஹீரோவாக மாறிய சந்தானம் பல படங்களில் ஹீரோவாக நடித்து வெற்றி பெற்றார். குறிப்பாக வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் ஏ ஒன் குலுகுலு வடக்குப்பட்டி ராமசாமி சபாபதி டிக்கிலோனா தில்லுக்கு துட்டு டிடி ரிடர்ன்ஸ் பாரிஸ் ஜெயராஜ் என பல படங்கள் சந்தானத்துக்கு பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றுத் தந்தது.

இந்நிலையில் இப்போது தில்லுக்கு துட்டு டிடி ரிடர்ன்ஸ் படங்களின் தொடர்ச்சியாக சந்தானம் நடித்த டிடி நெக்ஸ்ட் லெவல் என்ற படம் விரைவில் வர இருக்கிறது. இதில் சந்தானத்துக்கு நடிகை கஸ்தூரி அம்மாவாகவும் நடிகர் நிழல்கள் ரவி அப்பாவாகவும் நடித்திருக்கின்றனர். யாஷிகா ஆனந்த் தங்கையாக நடித்துள்ளார்.

- Advertisement -

டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் பிரமோ நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் சந்தானம் கூறியதாவது, மதகஜராஜா படம் ரிலீஸ் ஆகிறது என கேள்விப்பட்டதும் எனக்கு சின்னதாக ஒரு பயம் இருந்தது. 12 வருஷங்களுக்கு முன்னாடி பண்ணின காமெடி இப்போது ஒர்க் அவுட் ஆகுமா என்று நினைத்தேன். ஆனால் ஒர்க் அவுட் ஆயிடுச்சு.

அப்போது இயக்குனர் சுந்தர் சி என்னிடம் சொன்னது இன்னமும் ஞாபகம் இருக்கு. சந்தானம் உங்க நேரம் ரொம்ப நல்லா உச்சத்தில் இருக்கிறது. நீங்கள் தொட்டது எல்லாம் துலங்குது. அதனால் மதகத ராஜா படத்தில் உங்க போர்ஷன் பெரிய ஹிட் ஆகும்ன்னு நினைக்கிறேன் என்றார். அவரது அந்த வார்த்தை பலித்துவிட்டது என்று நடிகர் சந்தானம் அந்த நிகழ்ச்சியில் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்