- Advertisement -
Homeபொழுதுபோக்குஆதிக் ரவிச்சந்திரன் படத்தை அஜித் ஒத்துக் கொண்ட காரணம் இதுதானாம்... அடேங்கப்பா பின்னணியே இவ்வளவு சுவாரசியமா...

ஆதிக் ரவிச்சந்திரன் படத்தை அஜித் ஒத்துக் கொண்ட காரணம் இதுதானாம்… அடேங்கப்பா பின்னணியே இவ்வளவு சுவாரசியமா இருக்கே…

- Advertisement -

நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கியது. கிட்டத்தட்ட நீண்ட நாட்களாகவே இதன் சூட்டிங் நடைபெற்று வருகிறது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் அஜர்பைஜான் நாட்டில் படமாக்கப்பட்டுள்ளன.

ஆறு மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் இதன் படப்பிடிப்பு இன்னும் முடிந்த பாடில்லை. இன்னும் இறுதி கட்ட படப்பிடிப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில், அதற்கான பணிகளில் மகிழ் திருமேனி ஈடுபட்டு வருகிறார். இந்தப் பக்கமோ நடிகர் அஜித் வழக்கம்போல பைக்கை எடுத்து சுற்றுலா சென்று வருகிறார்.

- Advertisement -

இதற்காக தனது நண்பர்கள் பட்டாளத்துடன் அவர் தேர்வு செய்திருக்கும் இடம் மத்திய பிரதேசம். அங்கு தனது நண்பர்களுக்கு அவர் பிரியாணி சமைத்துக் கொடுத்த காட்சிகள் வெளியாகின. இந்த டூரில் பிக் பாஸ் புகழ் ஆரவ்வும் இடம் பெற்றிருக்கிறார்.

இவர் ஏற்கனவே விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். அப்போது அஜித்துடன் ஏற்பட்ட பழக்கத்தின் காரணமாக, அவர் தற்போது பைக் டூரில் கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் படத்தில் அஜித் நடிக்கிறார்.

- Advertisement -

இதற்கு, குட் பேட் அக்லி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை தெலுங்கில் உள்ள மைத்திரி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஜூன் மாதம் இதன் படபிடிப்பு தொடங்கும் நிலையில், அடுத்த ஆண்டு பொங்கலுக்கு திரைப்படம் வெளியாகிறது. இந்த படத்திற்கான கதையை, நேர்கொண்ட பார்வை படப்பிடிப்பின் போதே அஜித்திடம் ஆதிக் கூறியிருக்கிறார்.

அந்தப் படத்தில் ஆதிக் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படத்தின் கதையை அஜித் ஓகே செய்த பிறகு, தயாரிப்பாளர் குறித்த ஆலோசனை ஏற்பட்டிருக்கிறது. அப்போது அஜித், ஒரு பெரிய படத்தை எடுப்பதற்காக ஆதிக்கை அறிவுறுத்தி இருக்கிறார். இதனைத் தொடர்ந்தே மார்க் ஆண்டனி படத்தை எடுத்து அதை 100 கோடி ரூபாய் வசூல் பெருமளவுக்கு வெற்றி பெற செய்து இருக்கிறார் இயக்குனர். இதன் பிறகு மீண்டும் அஜித் ஆதிக் படம் தொடர்பான பேச்சு எழ, தற்போது அது அடுத்த கட்டத்திற்கு சென்றிருக்கிறது.

- Advertisement -

சற்று முன்